இரவு 11 மணிக்கு நெஞ்சை பிடித்த டேனியல் பாலாஜி.. சிஆர்பி செய்தும் பிழைக்காத "அமுதன்"! நடந்தது என்ன?
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிஆர்பி எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி எனும் டிவி சீரியல் மூலம் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் பாலாஜி. பின்னாளில் இவர் டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து மிரட்டியிருப்பார். அதிலும் வேட்டையாடு விளையாடு படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. வில்லன் கேரக்டருக்கு டேனியல் பாலாஜியின் பாடி லேங்குவேஜ், மேனரிசம், குரல் ஆகியவை பக்காவாக பொருந்தும்.
அறிமுக படம் எது: 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தில் டேனியல் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் படத்திலும் நடித்திருந்தார். பிறகு காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு எதிராக நடிக்கும் வில்லன் கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பொல்லாவதன், லியோ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை தந்தன.
இவர் சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளார். தனது தாயின் ஆசைக்காக இந்த கோயிலை அவர் கட்டியிருந்தார். அதன் கும்பாபிஷேகம் கூட கடந்த மார்ச் 9ஆம் தேதிதான் நடைபெற்றது. ஆன்மீகம் மீது அதிக நாட்டத்துடன் இருந்தார்.
மாரடைப்பு: இவருக்கு நேற்று இரவு 11 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் டேனியலை , கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் சிஆர்பி எனப்படும் முதலுதவி சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.
அதாவது மார்பில் இரு கைகளின் உள்பகுதியை வைத்து அழுத்தம் கொடுப்பது! மாரடைப்பு வந்து பேச்சு மூச்சு இல்லாமல் மருத்துவமனைக்கு வந்தவர்கள், இந்த சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மருத்துவமனைக்கு சென்றே டேனியலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டேனியல் பாலாஜி கண்கள் தானம்: இதையடுத்து டேனியல் பாலாஜி தனது கண்களை தானமாக அளிப்பதாக ஏற்கெனவே எழுதி கொடுத்திருந்ததை அடுத்து அவரது கண்கள் தானமாக பெறப்பட்டன. பின்னர் அவருடைய உடல் அவருடைய பூர்வீக இடமான புரசைவாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மாலை அவருடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
நடிகர் டேனியல் பாலாஜி உயிருடன் இருக்கும் வரை நலிவுற்றவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வந்தார் என அவரை பற்றி தெரிந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். உதவி, உதவி என இருந்தவர், இறந்த பிறகும் கண்களை தானம் செய்து கண் இல்லாதவர்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளார். இவருடைய ஆன்மா சாந்தியடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர்: மறைந்த "இதயம்" நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். அவரை போலவே டோனியலும் இளம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருடைய உடலுக்கு முரளியின் மகன் அதர்வா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த செல்வர் என தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications