Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீ கடையில் நெஞ்சை பிடித்த மயில்சாமி.. அதிகாலையில் அங்கே என்ன நடந்தது? ஆட்டோ டிரைவரின் வாக்குமூலம்

அந்த கடையில் எப்போதும் பார்க்கும் ஆட்களை பார்த்ததும் மயில்சாமி வணக்கம் வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் மயில்சாமி மரணம் அடைந்தது தொடர்பாக அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற ஓட்டுனர் பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பிரபல நடிகர் மயில்சாமி இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் மயில்சாமி.

பல்வேறு படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் மயில்சாமி. இவருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்.

ஆன்மிகம்

ஆன்மிகம்

முக்கியமாக இவர் தீவிரமான சிவ பக்தர். அடிக்கடி சிவன் கோவில்களுக்கு செல்லும் வழக்கம். கொண்டவர். முக்கியமாக சிவராத்திரி தினங்களில் இரவு முழுக்க பூஜை நடத்தும் வழக்கம் கொண்டவர். அந்த வகையில்தான் நேற்று அவர் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இந்த கோவிலுக்கு அவர் அடிக்கடி செல்வார் என்று கூறப்படுகிறது. அங்கு நேற்று இரவு முழுக்க அவர் பூஜையில் கலந்து கொண்டார். இங்கே நடந்த கச்சேரியிலும் கலந்து கொண்டார்.

இரவு பூஜை

இரவு பூஜை

இரவு முழுக்க இங்கே தூங்காமல் அவர் வழிபாடு நடத்தி இருக்கிறார். நன்றாக சாப்பிட்டுவிட்டு இவர் கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் பேட்டி அளித்துள்ளார். அதன்படி அதிகாலையில் மயில்சாமி சாலிகிராமத்திற்கு அருகே இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த ரோட்டில் இருக்கும் டீ கடை ஒன்றில் இவர் நின்று டீ குடித்துள்ளார். அந்த டீ கடை பெயர் சுந்தர் டீ கடை.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அந்த கடையில் எப்போதும் பார்க்கும் ஆட்களை பார்த்ததும் மயில்சாமி வணக்கம் வைத்துள்ளார். அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அவருக்கு அப்போதுதான் லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது போல நெஞ்சை பிடித்துள்ளார். அங்கேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவர் மயங்கி உள்ளார். சுந்தர் டீ கடையில் இருந்த சுந்தர் அதன்பின் அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி அனுப்பி உள்ளார். அங்கிருந்துதான் அவரை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.

மரணம்

மரணம்

டீ குடித்துக்கொண்டு இருந்தவர் அப்படியே மயங்கி விழுந்து இருக்கிறார். அவரின் உறவினர் ஒருவர் உடன் இருந்துள்ளார். இருவரும் காரில்தான் வந்தனர். என்றாலும் அவசரத்திற்கு காரில் போவதற்கு பதில் ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரது உயிர் மருத்துவமனைக்கு வரும்போதே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து.உள்ளனர் மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது..

மாரடைப்பு

மாரடைப்பு

இவர் அந்த டீ கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கமாம். டீ கடை உரிமையாளர் சுந்தருக்கும் இவர் நெருக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அங்கேயே மயங்கி இவர் மரணம் அடைந்து உள்ளார். இரவு முழுக்க இவர் விழித்து இருந்தது மாரடைப்பை தூண்டி விட்டு இருக்கலாம். ஏற்கனவே அவருக்கு இருந்த பிரச்சனைகள் இதனால் தீவிரம் அடைந்து அதுவே மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இன்று காலையில் இருந்து நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+