சீரியல் நடிகை சித்ராவிற்கு நடந்தது என்ன? தந்தையின் குற்றச்சாட்டுக்கள் என்ன? திடீர் மனு ஏன்?
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2020 டிசம்பர் 9ம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனும், அதேபோல் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும், சித்ராவினுடைய தந்தை காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல்செய்துள்ளார்.
வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் கூட, அந்த விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று சித்ராவின் தந்தை காமராஜ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்த வருவதாகவும், 2021ம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கு, குற்றச்சாட்டை பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் சித்ராவின் தந்தை காமராஜ் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் முதுமை காரணமாக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், இந்த வழக்கில் சாட்சியாக இருக்கக்கூடியவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருப்பதால், சித்ராவின் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று காமராஜ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது? கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். அப்போது அந்த தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத் தான் தற்கொலைக்கு காரணம்என புகார் எழுந்தது. சித்ராவும், ஹேம்நாத்தும் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டதும் அப்போது தான் விசாரணையில் தெரியவந்தது.
சித்ரா படப்பிடிப்பில் இருந்தபோது, ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டதாகவும். சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தை விட்டுப் பிரிந்து வரும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவும், அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டு துன்புறுத்தியாகவும் ஹேம்நாத் மீது அப்போது புகார் எழுந்தது. இதனால், ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தகவலும் 2020ம் ஆண்டு வெளியானது. சித்ராவின் மரணத்துக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா உட்பட பலரும் குற்றம் சாட்டி வந்தனர்
இது சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், பின்னர் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்தினார். விசாரணக்கு பின்னர் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, ஹேம்நாத்தைக் கைது செய்தார்.
இந்நிலையில் சில மாதங்கள் சிறையில் இருந்த சித்ராவின் கணவர் ஹேம்நாத். 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை ஜாமினில் வெளியே வந்த பின்னர் கூறினார். அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது என்றும் சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம், அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தினால், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது என்றும் கூறி அதிர வைத்தார்.
இந்நிலையில் திருவள்ளூரில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், சென்னைக்கு மாற்றக் கூறியும் தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications