நள்ளிரவில் திடீரென நடுங்கிய நடிகர் போண்டாமணி.. இரவு நடந்தது என்ன.. கண்ணீருடன் விவரித்த மகன்
சென்னை: நடிகர் போண்டாமணி இறப்பதற்கு முன்னர் என்ன நடந்தது என்பது குறித்து அவருடைய மகன் சாய்ராம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரான போண்டாமணி, வறுமைக் காரணமாக சிக்கித் தவித்து வந்த அவர், இலங்கை போரின் போது சென்னைக்கு வந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். இவர் ஆரம்பத்தில் வேலை தேடி கஷ்டப்பட்ட நிலையில் பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜ் சிறிய வேடம் கொடுத்தார்.

இதையடுத்து தென்றல் வரும் தெரு, மருதமலை, இங்கிலீஷ்காரன், திருமலை, படிக்காதவன், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சாய் கலைக் கூடம் என்ற நாடக கம்பெனியையும் நடத்தி வந்தார். இதுவரை இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் பருவக் காதல் என்ற படத்தில் நடித்த போது நிஜ சாக்கடைக்குள் விழுவது போன்ற சீன் எடுத்த போது திடீரென மயங்கி விழுந்தார். கடந்த ஆண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு நுரையீரலில் தண்ணீர் சேர்ந்துவிட்டதாகவும் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியனின் உத்தரவின் பேரில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்காக மயில்சாமியின் ஏற்பாட்டில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் ஏற்பாடுகள் நடந்தன. அதற்குள் மயில்சாமி இறந்துவிட்டார்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டதால் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் உதவுவதாக தெரிவித்தனர். இவருடைய மகளுக்கு ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் கல்லூரியில் இலவசாக சீட்டு கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் பொழிச்சலூரில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். இந்த நிலையில் போண்டாமணிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதில் அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அவருடைய மகன் சாய்ராம் கூறுகையில், நேற்று இரவு அப்பாவுக்கு திடீரென குளிர் ஜூரம் வந்தது. உடனே அவர் கீழே மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே உயரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications