ஈபிஎஸ்க்கு வணக்கம்! ஆனா ஓபிஎஸ்க்கு.. சந்திக்க மறுத்தாலும் பிரதமர் மோடி கொடுத்த இறுதி ட்விஸ்ட்! ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த வேளையில் தனியாக சந்திக்க பிரதமர் மோடியிடம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நேரம் கேட்டனர். இருவரையும் பிரதமர் மோடி தனியே சந்திக்கவில்லை. இதற்கிடையே தான் சென்னையை விட்டு பிரதமர் மோடி சென்றபோது வழியனுப்ப வந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வத்தை பார்த்து பிரதமர் மோடி கொடுத்த ரியாக்சன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக சென்னை வந்தார். சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பிறகு சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பிரதமர் மோடி பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

What happened to Edppadi Palanisamy and O Panneer Selvam on PM Modi Send off ceremoney at Chennai Airport

அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய ரயில் சேவை, சாலை, பாலங்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினர்.

சென்னை நிகழ்ச்சியை முடித்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்று ஓய்வெடுத்தார். இன்று காலை 9.35 மணிக்கு மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு கிராமத்தில் யானை வளர்ப்பு தம்பதியான ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளியை சந்தித்து கவுரப்படுத்துகிறார்.

முன்னதாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேரம் கேட்டிருந்தனர். இருவருக்கும் நேரம் ஒதுக்கப்படாமலே இருந்தது. அதன்பிறகு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்று, வழியனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.

அதோடு பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் தனித்தனியாக 10 நிமிடங்கள் வரை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி இருவரையும் தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர்களை தனியாக சந்தித்து பேசவில்லை.

இருவரும் பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடியை வழியனுக்க இருவரும் சென்னை விமான நிலையத்தில் ஒருமணிநேரம் வரை காத்திருந்தனர். பிரதமர் மோடியிடம் தனியாக பேசலாம் என அவர்கள் நினைத்த நிலையில் அது நடக்கவில்லை. இதனால் பிரதமர் மோடியை அவர்கள் அவர்கள் வழியனுப்பினர்.

இந்த வழியனுப்பும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து பிரதமர் மோடி வணக்கம் செய்துள்ளார். அதேபோல் அங்கு நின்ற முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை பார்த்த பிரதமர் மோடி தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு விமானத்தில் ஏறி சென்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. மாறாக பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசவில்லை. இதனால் இருவரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
*******

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+