முரசொலிக்கு கட்டுரை எழுத குறிப்புகளை எடுத்த செல்வம்! திடீரென மாரடைப்பு வந்தது எப்படி?
சென்னை: முரசொலியில் அடுத்த கட்டுரைக்கு குறிப்புகளை எடுத்து வைத்த செல்வம், சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பு வந்து காலமானார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த பிள்ளையுமான முரசொலியின் ஆசிரியராக திகழ்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 84. இவர் கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரம்மாளின் மகனாவார்.

தனது சகோதரியின் மகனையே தனது மகள் செல்விக்கு மணம் முடித்து வைத்தார். செல்வியும் செல்வமும் பெங்களூரில் வசித்து வந்தனர். இவர் முரசொலியின் ஆசிரியராக இருந்ததால் முரசொலி செல்வம் என்றே அழைக்கப்பட்டு வந்தார். பலர் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு ஊன்றுகோலாக இருந்தவர் செல்வம் என்கிறார்கள்.
இன்றும் கூட முரசொலியில் கடைசி பக்கத்தில் இளைஞர்களை எழுத வைத்து அவர்களின் இலக்கியத் திறனை வெளியே கொண்டு வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்று காலை செல்வம் மறைந்துவிட்டார் என்ற தகவல் திமுகவினருக்கும் அவரால் வாழ்வில் உயர்ந்த பத்திரிகையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
முரசொலி செல்வம் இன்று காலை முரசொலியில் தான் எழுத வேண்டிய கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்தார். பின்னர் கொஞ்சம் சோர்வாக இருந்ததால் அவரது நாற்காலியிலேயே கண் அயர்ந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த துயரமான செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர். முரசொலி எப்போதும் தான் எழுதிய செய்தியை மறுக்கவே மாட்டாராம். அது போல் அந்த செய்திக்கான சோர்ஸ் எங்கிருந்து வந்தது என்பதையும் சொல்ல மாட்டாராம். அது பத்திரிகை தர்மம் ஆகாது என்ற கொள்கையில் கடைசி வரை இருந்தாராம்.
அவதூறு வழக்கு ஒன்றில் சட்டசபை கூண்டில் ஏற்றப்பட்டாராம். ஒரு பத்திரிகை ஆசிரியர் சட்டசபை கூண்டில் ஏற்றப்பட்டது தமிழக வரலாற்றிலேயே அதுதான் முதல்முறையாம். முரசொலி செல்வம் தனது கட்டுரைகளில் ஆர்.எம்.வீரப்பனை பற்றியே அவதூறு கருத்துகளை கூறியிருந்தாராம். அது போல் அரசின் கொள்கைகள் குறித்தும் சட்டசபையின் அதிகாரம் குறித்தும் முரசொலியில் பல்வேறு கட்டுரைகளை எழுதினாராம்.
இதை எதிர்த்து அவதூறு வழக்கு தொடராத அதிமுக அரசு, அவரை சட்டசபை கூண்டில் ஏற்றியதாம். அப்போது சபாநாயகராக பி.எச். பாண்டியன் இருந்தார். முதல்வராக ஜெயலலிதா அவையில் இருந்தார். அப்போது நடந்த விசாரணையில் தனக்கு சோர்ஸ் கொடுத்தவர்களை காட்டி கொடுக்க முடியாது என மறுத்தார். சட்டசபையில் அவருக்கு எதிராக தீர்மானம் நடைபெற்றது முரசொலி செல்வத்தை கண்டித்ததற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாய்மாமா கருணாநிதி கொடுத்த பொறுப்பிலிருந்து கடைசி வரை விலகாமல் இறுதி மூச்சின் போதும் முரசொலிக்கு கடைசி கட்டுரையை எழுதியது பலருக்கு மனவேதனையை தந்துள்ளது. பத்திரிகைத் துறை மீது அவருக்கான தீராத காதலையும் இது வெளிப்படுத்துகிறது.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications