ஸ்ரீபெரும்புதூர் சொகுசு ஓட்டலில் சமையல்காரருக்கு.. கல்யாணமான 3 மாதத்தில் கனவிலும் நினைக்காத சம்பவம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு ஹோட்டல் செயல்படுகிறது. இங்கு சமையல்காரராக பணிபுரிந்து வந்த இளங்கோவுக்கு 3 மாதங்கள் முன்பு தான் திருமணம் நடந்தது. இந்நலையில் ஹோட்டலில் சமைத்து கொண்டிருந்த போதே யாருமே நம்ப முடியாத சம்பவம் நடந்தது. அதுபற்றி பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தவர் திண்டிவனத்தைச் சேர்ந்த 36 வயதாகும் இளங்கோ. இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரி என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் பாரதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஹோட்டலில் பணியில் இருந்தபோது இளங்கோ திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், இளங்கோவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் சமையல்காரர் உயிரிழந்த சம்பவம், குடும்பத்தார் மற்றும் ஹோட்டல் ஊழியர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
36 வயதில் சமையல்காரருக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்குமா அல்லது உணவுப் பழக்கம் காரணமாக இருக்குமா என்பதை பார்ப்போம். 36 வயது என்பது மாரடைப்பு ஏற்படுவதற்கு மிகக் குறைந்த வயது என்றாலும், சமீபகாலமாக இளைஞர்களிடையே இது அதிகரித்து வருகிறது. ஹோட்டல் சமையல்காரர் பணி என்பது இன்றைக்கு மிகவும் சவாலானது. நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வது, அதிக வெப்பமான சூழலில் இருப்பது மற்றும் போதிய உறக்கமின்மை ஆகியவை இதயத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.
மயங்கி விழுந்து உடனடியாக உயிர் பிரிந்திருக்கிறது என்றால், அது பெரும்பாலும் மாரடைப்பாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.
சமையல் துறையில் இருப்பவர்களுக்கு உணவுப் பழக்கம் ஒரு முக்கிய காரணியாகவும் இருக்கலாம். ஹோட்டல் உணவுகளில் ருசிக்காகச் சேர்க்கப்படும் அதிகப்படியான உப்பு மற்றும் 'டிரான்ஸ் ஃபேட்' எனப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணெய் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தைப் பாதிக்கலாம். சமையல் கலைஞர்கள் மற்றவர்களுக்குச் சமைப்பதிலேயே குறியாக இருப்பதால், அவர்கள் சரியான நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் ஆரோக்கியத்தைச் சீர்குலைத்துவிடும்.
சமையலறையின் கடும் வெப்பத்தில் தொடர்ந்து வேலை செய்யும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் சமநிலை மாற வாய்ப்புள்ளது. இதுவும் மயக்கம் மற்றும் இதயத் துடிப்பு பாதிப்புக்கு வழிவகுத்துவிடுகிறது. அதேநேரம் காஞ்சிபுரம் சமையல்காரரை பொறுத்தவரை அவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருந்திருக்கலாம், அது தெரியாமல் போயிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எது எப்படியாக இருந்தாலும், காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக (Post-mortem) உடலை அனுப்பியுள்ளனர். அந்த ஆய்வின் அறிக்கை வந்த பிறகுதான், அது மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் உள் உறுப்பு பாதிப்பா என்பது நூறு சதவீதம் உறுதியாகத் தெரியும் என்பதால் அந்த அறிக்கைக்காக உறவினர்கள் காத்திருக்கிறார்கள்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications