ஐஏஎஸ் அதிகாரி மகள் கழிவறையில் இருந்த கோலம்.. இப்படியும் ஒரு மருமகனா.. பரபரப்பு தகவல்கள்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியில் வசிக்கும் சின்ன ராமுடு ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது மகள் சாஹிதிபாய்க்கு 27 வயது ஆகிறது. இவர் ராஜேஷ் நாயுடு என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோர் சம்மதித்துள்ளார். இதன்படி திருமணமும் நடந்தது. ஆனால் வெறும் 10 மாதம் கூட சந்தோஷம் நிலைக்கவில்லை. ஐஏஎஸ் அதிகாரி மகளுக்கே இந்த நிலையா என்ற கேள்விகள் எழும்பியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை அம்பானியாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் வரதட்சணை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. என்ன தான் திருமணம் செய்யும் போது வரதட்சணை கேட்கவில்லை என்றாலும் உங்கள் பெண்ணுக்கு நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்பார்கள்.. எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூற மாட்டார்கள். திருமணத்திற்கு பின்னர் தான் வேலையை காட்டுவார்கள். இதில் ஐஏஎஸ் அதிகாரி மகள் கூட தப்பிக்க முடியாத நிலை தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் என்ன தான் அப்பா அதிகாரத்தில் இருந்தாலும் மகளுக்கு நடந்த வரதட்சணை கொடுமை விவாகரத்தில் அவராலும் உடனே நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆந்திராவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியில் வசிக்கும் சின்ன ராமுடு என்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவரது மகள் மாதுரி சாஹிதிபாய்க்கு 27 வயது ஆகிறது. இவர் கடந்த மார்ச் மாதம் நந்தியால மாவட்டம் பேதஞ்சர்லா மண்டலம் புக்கனபள்ளி தண்டாவை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமனம் செய்துள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திருமணமான சில மாதங்களில் பிறந்த வீட்டில் வரதட்சணை கேட்டு வாங்கி வரும்படி மாதுரி சாஹிதிபாயை கணவர் ராஜேஷ் நாயுடு துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மகளுக்கு நடக்கும் கொடுமையை அறிந்த தந்தை சின்ன ராமுடு மாதுரி சாஹிதிபாயை 2 மாதங்களுக்கு முன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாராம். இதனால் மனவேதனையில் மாதுரி சாஹிதி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பெற்றோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, மாதுரி சாஹிதி திடீரென தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டாராம்.
நேற்று காலை வெகு நேரமாகியும் மகள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சின்ன ராமுடு மற்றும் அவரது மனைவி, பணியாளர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். கழிவறையில் மாதுரி சாஹிதி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு ஆடிப்போனார்கள்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாதுரி சாஹிதிபாய் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வரதட்சணை கொடுமையால் தான் மகள் வாழ்க்கைய முடித்துக் கொண்டதாக மருமகன் ராஜேஷ் நாயுடு மீது பெண்ணின் தந்தை சின்ன ராமுடு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவம் ஆந்திராவையை அதிர வைத்துள்ளது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications