சுத்த மோசம்.. நடக்கக்கூட முடியல.. வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலி திடீர் மரணம்.. என்னாச்சு?
வண்டலூரில் ஆனா ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உயிரிழந்தது..
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆனா ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உயிரிழந்தது... ஆட்டாக்ஸி நோயால் பாதிக்கப்பட்டு 2 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த வெள்ளை புலி பரிதாபமாக இறந்தது... அதற்கு வயது 13.
தாம்பரம் அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது... இது இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா என்ற பெருமையை பெற்றது.
கொரோனா பரவல் சமயத்தில் இந்த பூங்காவையும் தொற்று விடவில்லை.. எத்தனையோ விலங்குகளுக்கு தொற்று பரவியது.. இதில் ஒரு சிங்கம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது..

கட்டுப்பாடுகள்
இதற்கு பிறகு, பூங்கா இழுத்து மூடப்பட்டு, அதன்பிறகு தீவிர தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.. பூங்காவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.. அதற்கு பிறகுதான் தொற்று குறைந்ததும் பூங்கா திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியானது. இந்த உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள் வனச்சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.... அந்தவகையில், வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகம், நீர்நாய், என ஏராளமான பாலுட்டிகள், பறவைகள், ஊர்வன போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன...

கண்காணிப்பு கேமராக்கள்
இந்த உயிரினங்களை கண்ணும் கருத்துமாக கண்காணிக்கவே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.. இதைதவிர, கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.. எனினும், தற்போது புது புது வைரஸ்கள் பரவி வரும் நிலையில், எந்த ஒரு விலங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது அடுத்தடுத்து மற்ற விலங்குகளுக்கும் பரவிவிடுவதால், மருத்துவர் குழு ஒன்று இதற்காகவே தயார் நிலையில் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு
இந்தநிலையில், ஒரு வயதான புலிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.. 15 நாட்களாகவே அந்த வெள்ளை புலி சோர்வாக காணப்பட்டது.. 13 வயதாகிறது.. ஆனா ஆகான்ஷா என்று அந்த புலிக்கு பெயர்.. உடனடியாக மருத்துவர்கள் குழு புலிக்கு பரிசோதனை செய்தார்கள்.. அதில், அடாக்சியா நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது..

கோளாறு
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு கோளாறாம்.. பலவீனமான தசை ஒருங்கிணைப்பினால் விலங்குகளுக்கு நடக்க முடியாமல் போய்விடும்.. அந்த வகையில்தான், வெள்ளைப்புலியால் நடக்ககூட முடியாமல், சாப்பிடவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தது.. பிறகு புலிக்கு தேவையான சிகிச்சையும் தரப்பட்டது..ஆனாலும், பலனளிக்காமல், வெள்ளை புலி கூண்டிலேயே இறந்துவிட்டது.. வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது...












Click it and Unblock the Notifications