சென்னை நட்சத்திர ஓட்டலுக்கு ஆண் நண்பருடன் போன வக்கீல் ரோஜா.. குளியல் தொட்டிக்குள் இருந்த கோலம்
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கினார். இரவு அந்த பெண் மட்டும் ஓட்டலில் தங்கி இருந்தார். அவருடைய நண்பர் வெளியில் சென்று விட்டார். நேற்று பகலில் திரும்பி வந்த அந்த இளம்பெண்ணின் நண்பர் கதவைத் தட்டியுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. அங்கு பெண் வக்கீல் இருந்த கோலம் ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னையில் ஏராளமான நட்சத்திர ஓட்டல்கள் இருக்கின்றன. பலர் அறை எடுத்து தங்குவார்கள். திருமணமான ஜோடி, திருமணம் ஆகாத ஜோடி என பலரும் அறை எடுத்து தங்குவது வழக்கம். அதேபோல் வணிகம் சார்ந்து பலர் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவார்கள்.

அப்படித்தான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கியிருக்கிறார். இரவு அந்த பெண் மட்டும் ஓட்டலில் தங்கியுள்ளார். அவருடைய நண்பர் வெளியில் சென்று விட்டார்.
கதவை தட்டிய நண்பர்
நேற்று பகலில் திரும்பி வந்த அந்த இளம்பெண்ணின் நண்பர் கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர் ஓட்டல் நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் அவர் உடனே தகவல் கொடுத்தார். சென்னை தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து பூட்டி கிடந்த ஓட்டல் அறையை திறந்து பார்த்தார்கள்.
குளியல் தொட்டியில் ரோஜா
அங்கு கண்ட காட்சி அனைவரையும் ஆடிப்போக வைத்தது. அங்கு தங்கி இருந்த இளம்பெண் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் பிணமாக கிடந்தார். போலீசார் விசாரணையில் பிணமாக கிடந்த பெண் 32 வயதாகும் ரோஜா என்பது தெரியவந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், சென்னையில் தங்கி இருந்து வக்கீலாக பணியாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
மது அருந்திய ஜோடி
வக்கீல் ரோஜா உடன் தங்கி இருந்த நண்பரின் பெயர் யஷ்வந்த் குமார் என்று கூறப்படுகிறது. போலீசாரிடம் அவர், இரவு மது அருந்தியதாகவும், பின்னர் தான் வெளியில் சென்றுவிட்டதாகவும், ரோஜா மட்டும் தனி அறையில் இருந்ததாகவும் எனவே என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உறவினருக்கு தகவல்
ரோஜாவின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். விசாரணைக்கு பின்னரே உண்மை நிலை என்ன என்பது தெரியவரும். இப்படி ஓட்டலில் அறை எடுத்து தங்கும் ஜோடிகள், திடீரென தவறான முடிவெடுப்பது அடிக்கடி நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பதும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் என்ன தான் ஆதார் வாங்குவது, தகவல்கள் கேட்பது இருந்தாலும், தவறான மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications