செங்கல்பட்டு அருகே மாமியாருக்கு என்ன நடந்தது? சிக்கிய மருமகள்.. மகனையும் சிக்க வைத்த வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் வசந்தா தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் இருவருக்கும்இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளைய மகன் வெங்கடேச பெருமாளும்,அவரது மனைவியும் வசந்தாவை தரக்குறைவாக திட்டினார்களாம்.இதனால் வசந்தா எடுத்த முடிவும், அவர் கொடுத்த வாக்குமூலமும் மருமகளையும், மகனையும் சிக்க வைத்துள்ளது.

என்னதான் இன்று பெற்றோர்களை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவர்கள் அதனை போராடி பெறும் நிலை தான் இருக்கிறது. கடைசி காலத்தில் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பிள்ளைகள்,அவர்கள் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஒதுக்கிவிடுகிறார்கள்.. மாமியார், மருமகள் இடைய ஏற்படும் கோபம், ஈகோவில் சிக்கி கொள்ளும் மகன், கடைசியில் பிள்ளைகளுக்காக மனைவி பக்கமே சாய்ந்து விடுகிறான். இதனால் மனைவி செய்யும் தவறுகள் அவருக்கு தெரிவது இல்லை..

what happened to the mother-in-law near Chengalpattu daughter-in-law were arrested in Kanchipuram

கடைசியில் தாயை ஒதுக்கி வைப்பது, அவதூறாக பேசுவது, மோசமாக நடத்துவது நடக்கிறது. மருமகள் மாமியாரை கொடுமை செய்வதும், மாமியார் மருமகளை கொடுமை செய்வதும் நடக்கிறது. இதில் யாரோ ஒருவர் தான் ஜெயிக்கிறார்கள். இன்னொருவர் கடைசி வரை விட்டுக்கொடுத்து செல்லும் நிலையே இருக்கிறது. உத்திரமேரூர் அருகே நடந்த சம்பவம் பறறி பார்ப்போம்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவரது மனைவி வசந்தா (65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் சங்கர் (47), இளைய மகன் வெங்கடேச பெருமாள் (38). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக வீட்டில் பாகம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் இளைய மகன் வெங்கடேச பெருமாள் காஞ்சிபுரம் அருகே வசித்து வரும் மாமியார் வீட்டுக்கு சென்று வசித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி சங்கரிடம் தாய் வசந்தா வீட்டின் அருகில் உள்ள இடத்தில் இன்னொரு வீடு கட்டலாமே என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த சங்கரும், அவரது மனைவி சாந்தி இருவரும் வசந்தாவை தரக்குறைவாக திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தா மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரிடம் செங்கல்பட்டு நடுவர் மன்ற நீதிபதி லாவண்யா வாக்குமூலம் பெற்றார் அப்போது அவரிடம் தன்னை தற்கொலைக்கு தூண்டியது, தனது மகன் சங்கரும் மருமகள் சாந்தியும் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் பெற்று வந்த வசந்தா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வசந்தாவின் கணவர் ஆறுமுகம் பெருநகர் போலீஸ் நிலையத்தில் தனது மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து சங்கர் மற்றும் அவரது மனைவி சாந்தி இருவரையும் கைது செய்தனர்.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+