கதவை திறக்காத தாம்பரம் கல்லூரி மாணவி.. செல்போனையும் எடுக்கல.. அறை கதவை உடைத்து பார்த்தால் ஷாக்
சென்னை: சென்னை தாம்பரம் அருகே பாரத் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, அறை கதவை நீண்ட நேரமாக திறக்கவே இல்லை.. செல்போனில் அழைத்த போதும் எடுக்கவே இல்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் சகோதரி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், அங்கு இருந்த காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்தது. நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் கல்லூரி மாணவி நித்ய ஜீவன். தனியார் கல்லூரியில் பி சி ஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். (வயது 19). இவர், ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு, கல்லூரியில் சென்று படித்து வந்துள்ளார்.

இதனிடையே மாணவி நித்யஜீவனின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கணவருக்கு உதவியாக அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார். இதனால் நித்யஜீவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நித்ய ஜீவனின் தாயார் நீண்டநேரம் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவேயில்லை. இதனால் அருகில் உள்ள அவரது சகோதரியிடம் கூறி, வீட்டுக்கு சென்று பார்க்கும்படி தெரிவித்துள்ளார். அதன்படி அவரது சகோதரி, வீட்டுக்கு சென்று நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மின்விசிறியில் நித்யஜீவன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உடல் நிலை சரி இல்லாமல் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற என்ற சேலையூர் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தாம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications