மகாபலிபுரம் தனியார் ஓட்டலில் ஒரே நொடி தான்.. பிளஸ் 2 மாணவனுக்கு நினைத்தே பார்க்க முடியாத சம்பவம்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலுக்கு முகப்புப் பகுதியில் பெயர் பலகை அமைப்பதற்கு முடிவு செய்தனர். இந்த வேலைக்காக 12 வகுப்பு படிக்கும் மாணவன் உள்பட இரண்டு இளைஞர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அடுத்த சில நாளில் பரிட்சை எழுத வேண்டிய 12ம் வகுப்பு மாணவன் வேலைக்கு வந்ததால் என்ன நடந்தது தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
இன்றைய சூழலில் படிக்கிற வயதில் வேலைக்கு செல்வது சாதாரணமாக இருக்கிறது. ஏனெனில் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் படிக்கிற வயதில் வேலைக்கு போகிறார்கள். வேலை செய்து கொண்டே படிக்கிறார்கள். அப்படி படித்த ராஜேஷ், இன்னும் சில நாளில் பிளஸ் 2 தேர்வு எழுத தயாராகி வந்தார். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை. என்ன நடந்தது.

ஓட்டல் பெயர் பலகை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு கிழக்கு கடற்கரை சாலையையொட்டி தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலின் முகப்புப் பகுதியில் பெயர் பலகை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அகமது என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். அந்த வேலையை செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் 2 நபர்களை வேலைக்கு அழைத்து வரச் சொன்னார். அதன் பேரில் ராஜேஷ் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த, செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த பிரவீன் (வயது 18), மற்றும் அரசு (22) இருவரையும் அழைத்து வந்துள்ளார்.
மின் கம்பி
பிரவீன், அரசு இருவரும் அந்த தனியார் நட்சத்திர ஓட்டலின் முகப்பில் பெயர் பலகை பொருத்துவதற்காக அங்கிருந்த 15 அடி உயர அலுமினிய ஏணியை நகர்த்தி உள்ளார்கள். மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசி இருவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் பிரவீன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விரைந்து வந்த போலீஸ்
இளைஞர் அரசு படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அரசுவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பிரவீன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மறைமலைநகர் மக்கள்
மேலும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பிரவீன் ஊரான மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அவரது உறவினர்கள் அந்த தனியார் ஓட்டல் முன்பு திரண்டனர். 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவனுக்கு எந்த ஆவணத்தை வைத்து வேலை கொடுத்தார்கள், இன்னும் ஓரிரு நாட்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுத உள்ளார். அவரது உயிரை உங்களால் மீட்டுத் தர முடியுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி ஓட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதனால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications