அப்பாவுக்கு என்ன ஆனது.. எங்களுக்கே ஷாக்தான்.. மனோபாலாவின் மகன் ஹரீஷ் பேட்டி!
சென்னை: அப்பா நன்றாக தேறி வந்தார். ஆனால் திடீரென அவர் உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என மனோபாலாவின் மகன் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் மனோபாலா நாகர்கோவிலில் மருங்கூர் என்ற ஊரில் பிறந்தவர். அவரது இயற்பெயர் பாலசந்தர். திரைப்படத்திற்காக மனோபாலா என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

அவர் கமல்ஹாசனின் பரிந்துரையின் பேரில் புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது பணியை தொடங்கினார். 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களாக கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மனோபாலாவுக்கு ஒரே ஒரு மகன். அவரது பெயர் ஹரீஷ். அவர் அமெரிக்காவில் இருந்தார்.
இந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார். அவர் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதுகுறித்து மனோபாலாவின் மகன் ஹரீஷ் கூறுகையில் அப்பா ஆரம்பத்திலிருந்தே உடல் நிலை சரியில்லாமல்தான் இருந்தார். இதயத்தில் பிரச்சினை இருந்தது, மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தோம். நன்றாக தேறி வந்தார். கடைசியாக ஒரு வாரமாகத்தான் அவரது உடல்நிலை மோசமானது.
நன்றாக நடந்தார், பிசியோதெரபி உடற்பயிற்சிகளை செய்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்பா திடீரென இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) அப்பாவுக்கு உயிர். நீங்கள் வந்ததற்கு நன்றி. நாளை காலை 10 மணிக்கு அப்பாவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என ஹரீஷ் தெரிவித்தார்.
னோபாலாவின் மகன் ஹரீஷுக்கும் பிரியாவுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்கான திருமண வரவேற்பு கிண்டி கத்திபாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், பூச்சி முருகன், நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி, பொன்வண்ணன், ராதாரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரியா அமெரிக்க வாழ் தமிழ் பெண். ஹரீஷும் பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications