சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இளையராஜாவை விடுங்க.. பிரதமர் மோடியே திராவிடர்தான்".. ஒரே போடாக போட்ட எச்.ராஜா.. அதிர்ந்த இணையம்

இளையராஜாவை ஆதரித்து எச் ராஜா பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "குஜராத் கூட திராவிட பிரதேசம்தான். பிரதமரே திராவிடர் தான்... எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாமலை அனைவருமே திராவிடர்கள் தான். திராவிடர்கள் தான் தமிழ்நாட்டை ஆள்வார்கள்" என்று இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்தான் இணைப்பு மொழி என்று சொன்னதால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக சொன்னதால் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை தமிழக மக்கள் சோஷில் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் மோடியை திடீரென புகழ்ந்து பேசியதுடன், அம்பேத்கருடனும் ஒப்பிட்டு பேசியதால் இசையமைப்பாளர் இளையராஜாவை பலர் கடுமையாக சாடி வருகின்றனர்.

இன்று இலங்கை.. நாளை தமிழகம்.. எதற்கு எதனுடன் கோர்த்து விடுகிறார் பாருங்க எச் ராஜா! இன்று இலங்கை.. நாளை தமிழகம்.. எதற்கு எதனுடன் கோர்த்து விடுகிறார் பாருங்க எச் ராஜா!

 எச்.ராஜா பேட்டி

எச்.ராஜா பேட்டி

எனவே, பாஜகவின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன் , ஆளுநர் தமிழிசை உள்பட பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜாவும், இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஏ.ஆர். ரகுமானுக்கும் தன்னுடைய கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்.

 எச் ராஜா

எச் ராஜா

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டுவந்து, அதன்மூலம் முன்னேற்றம் அவர்களை சென்றடைந்து இருக்கிறது. அம்பேத்கர் உயிரோடு இருந்தால் நிச்சயம் இதை பாராட்டியிருப்பார்', என இசையமைப்பாளர் இளையராஜா தெளிவாக கூறியிருக்கிறார்.

மனமாற்றம்

மனமாற்றம்

இதற்காக இளையராஜா எதையோ எதிர்பார்த்து தான் இப்படி கருத்து சொல்லியிருக்கிறார் என்று பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லாருடைய மனதிலும் ஒரு மனமாற்றம் வரும். அப்படி ஒரு மாற்றம் ஒரு பிரபலமான நபருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்பதாலேயே இப்படி விமர்சனங்கள் எழுகின்றன... இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'தமிழ் மொழி தான் இணைப்பு மொழியாக வரவேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 ஏஆர் ரகுமான்

ஏஆர் ரகுமான்

நான் கேட்கிறேன், அவரது பெயர் தமிழா? இளையராஜா சொன்னது இயல்பானது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் சொன்னது உள்நோக்கம் கொண்டது.. இளையராஜா தனது கருத்தை கருத்து சொல்ல அதிகாரம் இருக்கிறது. ஆனால் திராவிடியன் ஸ்டாக் தான் நினைக்கின்ற கருத்தை தான் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமென நினைக்கின்றது. பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். இளையராஜாவின் கருத்து இதை மாற்றி விடும் என்பதால்தான் அவரை இழிவுபடுத்துகிறார்கள்.

 திராவிடம்

திராவிடம்

திராவிடம் என்பது இனா? இடமா? நானும் திராவிடன் தான். .. குஜராத் கூட திராவிட பிரதேசம்தான். பிரதமரே திராவிடர் தான்... எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாமலை அனைவருமே திராவிடர்கள் தான். திராவிடர்கள் தான் தமிழ்நாட்டை ஆள்வார்கள்.. மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். இது சரியல்ல.. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடிய பாரதியாரின் சிலை திறப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாதது ஏன்?

Recommended Video

    Ilayaraja பதில்! | Modi, Ambedkar போன்றவர் | Ilayaraja On Modi | Oneindia Tamil
     வாக்குறுதி

    வாக்குறுதி

    திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது... அதாவது 365 நாட்கள் மட்டுமே கழிய போகின்றன. திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியை கூட செய்யவில்லை... திமுகவினர் அதிகார வரம்பை மீறி பேசுகின்றனர்... சட்டசபையில் 'நீட்' தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுவது வீண் முயற்சி. இது மக்களை ஏமாற்றும் முயற்சி. 2017-ம் ஆண்டு இதேபோல தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை ஜனாதிபதி திருப்பி அனுப்பினார். மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு காலக்கெடு என்பது கிடையாது" என்றார்.

    English summary
    what ilayaraja said about prime minister modi is natural, says bjp senior leader h raja
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X