Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலேயே அதிகம்.. விபி-ஜி ராம் ஜி திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்துள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ள திட்டத்தால் தமிழகத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. கிராம மக்களுக்கு வேலையிழப்பும், அரசுக்கு நிதி சுமையும் உண்டாகும் என்று எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. விபி-ஜி ராம் ஜி திட்டத்தால் தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறியவற்றை பார்ப்போம்.

100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டம் மத்திய அரசால் விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.

What impacts will the VB-G RAM G project have on Tamil Nadu TN Will be most affected state in India

100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் என மாற்றியது நல்லது என்றாலும், அதில் உள்ள சில நடைமுறைசிக்கல், அந்த திட்டத்தையே முடக்கி போட்டு விடும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. மகாத்மா காந்தியின் பெயரை மாற்றியது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில், மாநிலங்களுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும் என்றும், இதனால் திட்டம் செயல்படுத்த முடியாமல் போகும் அச்சம் நிலவுவதாகவும் கூறுகிறார்கள் எதிர்க்கட்சிகள்

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதும் மத்திய அரசு வழங்கியது. அதேபோல் சொத்துகளை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசின் பங்கு 25 சதவீதமூம் வழங்கி வந்தது.

ஆனால் புதிய திட்டத்தில் பணியாளர்கள் சம்பளம் மற்றும் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் இருக்கும். இது மாநிலங்களுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மிக அதிக பாதிப்பு ஏற்பட உள்ளதாம்.

ஏனென்றால் இந்தியாவிலேயே, இந்த திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது.தமிழ்நாட்டில், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய மொத்தம் 88 லட்சத்து 56 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் இந்த எண்ணிக்கையை விட பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதிகம் நிதி பெறுவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது

தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் (வேலைநாட்கள்) உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடவும் மிக அதிகம். ஆனால் அதே மதிப்பில் இந்த திட்டத்தை வரும் ஆண்டிலும் தமிழக அரசு செயல்படுத்தினால், அதாவது குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி தமிழக அரசு கூடுதலாக ஒதுக்க வேண்டி வரும். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை தமிழக அரசால் நிச்சயம் ஒதுக்க முடியாது என்கிறார்கள். எனவே இந்த திட்டத்தின் செலவை குறைக்க மாநில அரசு முற்படும். அப்படி செய்தால் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் அச்சம் நிலவுகிறது.

அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழக அரசு, ஒரு நிதியாண்டிற்கு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்த போகிறோம் என்று கூறி மத்திய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுப்பார்கள். பின்னர் திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தினாலும், அந்த தொகையையும் மத்திய அரசு கொடுத்து விடும். ஆனால் இனி அது போல் நடக்காது. கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவீதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டியது கட்டாயம் ஆகும்.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்தது. ஆனால் இனி 125 நாள் வேலை திட்டத்தில் பணிகளை மத்திய அரசும் அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.

100 நாள் வேலை திட்டத்தில் முன்பு தமிழக அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால் இனி 125 நாள் வேலை திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மக்கள் தொகை போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு தான் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே குறைவான மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

கிராமப்புறங்களில் இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை மற்றும் சிமெண்ட் ரோடு ஆகியவற்றுக்கும் 100 நாள் திட்டத்தின் வேலை உழைப்பு நாட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் இதற்கான பொருட்கள் செலவில் மத்திய அரசு 75 சதவீதம் வழங்கியது. ஆனால் இனி 60 சதவீதம் தான் வழங்கும் என்பதால் அதற்கும் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+