அவரின் டிப்ஸ்தான் மாஸ்.. பொருளாதார "கிங்".. ஆனந்த் சீனிவாசன் யார் தெரியுமா? அவர் சொத்து எவ்வளவு?
சென்னை: தமிழ்நாட்டில் இளைஞர்களின் செல்லமான பொருளாதார ஆலோசகர்.. அன்பான அட்வைஸராக மாறி இருக்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
தமிழ்நாட்டில் நெட்டிசன்கள், இளைஞர்கள் இடையே பிரபலமாக இருக்கும் பொருளாதார நிபுணர்தான் ஆனந்த் சீனிவாசன். பொருளாதாரம் என்றால் புரியாது, கசப்பாக இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு பொருளாதாரம் குறித்த எளிமையான விளக்கங்களை கொடுத்து புரிதலை ஏற்படுத்தி வருகிறார் ஆனந்த் சீனிவாசன்.
தமிழ்நாட்டில்.. முக்கியமாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் சேமிப்பு பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. கையில் 10 ஆயிரம் இருந்தால் கூட அதற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்கி.. 40 ஆயிரம் ரூபாய்க்கு இஎம்ஐ கட்டும் வழக்கம் இந்த தலைமுறையினர் இடையே அதிகம் ஆகி உள்ளது.

சேமிப்பு
புதிய இன்ஸ்ட்டா காலத்தில்.. மக்கள் பலர் சேமிப்பை விட ஆடம்பரமாக செலவு செய்வதே சிறப்பானது என்று நினைக்க தொடங்கி உள்ளனர். இஎம்ஐ கட்டியே இந்த காலத்து இளைஞர்கள் பலரின் வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இளைஞர்கள் ஏன் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் அறிவுரை வழங்கி வருகிறார். முக்கியமாக 90ஸ் கிட்ஸ் ஏன் இஎம்ஐ வைத்திருக்க கூடாது. ஏன் சேமிக்க வேண்டும். எவ்வளவு வருமானம் இருக்கும் போது சேமித்தால் சரியாக இருக்கும் என்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

ஆனந்த் ஸ்ரீனிவாசன்
இவர் சேமிப்பு தொடர்பாக கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிகளும் டாப் நாட்ச் என்றுதான் சொல்ல வேண்டும். "நீ 90ஸ் கிட்ஸ்.. 40 ஆயிரம் சம்பளம் இல்லைனா ஏன் திருமணம் பண்ணிக்கிற.. உனக்கு எதுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு போன்" என்று கோபமாக இவர் கொடுக்கும் பேட்டிகள் கூட பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளன. 90ஸ் கிட்ஸ்களை கொஞ்சம் பயமுறுத்தும் வகையிலும் இவரின் பேட்டிகள் உள்ளதாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் நம்மிடையே முதலீடு, சேமிப்பு பற்றிய மிகப்பெரிய புரிதலை ஆனந்த் சீனிவாசன் ஏற்படுத்தி உள்ளார்.

புகார்கள்
இவரின் பின்னணி விவரங்களை தெரிந்து கொள்வோம். ஆனந்த் ஸ்ரீனிவாசன் கோபாலபுரத்தில் இருக்கும் டிஏவி பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கும் பொருளாதாரம் சொல்லிக்கொடுத்தாலும் இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு வகையில் மிக மிக நெருக்கம். எந்த வகையில் என்றால் இவரும் எஞ்சினியரிங் படித்தவர்தான். Ramaiah Institute Of Technology என்ற பெங்களூரில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் இவரும் பொறியியல் படித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நிறுவனங்களில் பணியாற்றியவர் தற்போது பொருளாதார ஆலோசனை நிறுவனம் ஒன்றை சுயமாக நடத்தி வருகிறார்.

சொத்து மதிப்பு
அதாவது நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரின் சொத்துக்கள் என்று பார்த்தால் அசையும், அசையா சொத்துக்களை விட பங்கு ரீதியாக இவருக்கு சொத்துக்கள் அதிகம் உள்ளன. asset என்று கூறுவார்கள். அப்படி இவருக்கு ஒரு சில கோடி மதிப்பு கொண்ட சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி வெளிப்படையாக இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால் பொருளாதார ரீதியாக இவர் பல சிறப்பான முதலீடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது,
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications