அதிர்ஷ்டம் இல்லைனு ஃபீல் செய்றீங்களா? இந்த ஒரு பொட்டை வையுங்கள்! இனி "என்னோட ராசி நல்ல" பாட்டுதான்!
சென்னை: இந்த பொட்டை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பது ஐதீகம்.
நம் வீட்டில் இந்த ஒரு கல் இருந்தால் பணத்திற்கு கஷ்டமே வராதாம். அந்த கல்லின் பெயர் அஞ்சனை கல். இந்த கல்லை வைத்திருந்தால் கண் திருஷ்டி வராது, கெட்ட சக்தியின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் வராது.

அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்கிறார். தனலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்டுவாள். நம் வாழ்க்கை சிறப்பாக அமைய அந்த கல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். அஞ்சனை கல்லை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.
உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இந்த கல் நிச்சயம் உதவியாக இருக்கும். இந்த கல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இல்லாவிட்டால் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திலும் கிடைக்கும். அந்த கல் பார்ப்பதற்கு ஷைனிங்காக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள இந்த கல்லை ஒரு கல்லால் நசுக்கிக் கொள்ளலாம்.
இல்லாவிட்டால் அம்மியில் வைத்தும் நசுக்கி தூள் செய்யலாம். கருப்பு நிறத்தில் பொடியாக இருக்கும். இதை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலக்கினால் கண் மை போல் கிடைக்கும். இதை சிறிய குழந்தைகளுக்கு நெற்றி, கன்னம், உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் வைத்தால் கெட்ட சக்தி கிட்டே வராது என்றும் கண் திருஷ்டி ஏதாவது இருந்தால் அது விலகிவிடும் என்பார்கள்.
அது போல் பெரியவர்களும் நெற்றியில் மை போல் இட்டுக் கொள்ளலாம். ஒரு வேளை கருப்பு நிறம் என எண்ணினால், இந்த பொட்டை நெற்றி வகுட்டில் வைத்துவிட்டு பிறகு குங்குமத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த மையை நெற்றியில் வைத்துக் கொண்டால் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியம் துலங்காது என நினைக்கிறீர்களா?
ராசியில்லாதவர்கள் என உங்களை சொல்கிறார்களா, நீங்கள் கைராசிக்காரர்களாகவும் அதிர்ஷ்டக்காரர்களாகவும் மாறுவதற்கு இந்த அஞ்சனை கல் போதும் என்கிறார்கள். மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த அஞ்சனை கல்லால் ஆன மையை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சிறிய கல்லை வாங்கி பச்சை நிற துணியில் வைத்து கட்டி பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் சேரும் என்பார்கள்.
கடன் பிரச்சினை இருந்தாலும் அது படிப்படியாக குறையும். அஞ்சனை கற்களில் தற்போது போலி கூட வந்துவிட்டது. அஞ்சனை கல்லை தூள் செய்து அதில் காந்தத்தை காட்டுங்கள், அதில் இரும்பு துகள்கள் ஒட்டிக் கொண்டால் அந்த கல் அசல் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லில் செய்த மை தண்ணீரிலும் அழியாது என்பார்கள். இதனால் இதை கொண்டு வாட்டர் ப்ரூப் காஜல் தயார் செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications