ஓபனாக ஒப்புக்கொண்ட அண்ணாமலை.. பேச்சை கவனித்தீர்களா? பாஜக தலைவர்களுக்கு சொல்லவருவது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடனான மோதல்களுக்கு மத்தியில், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை.. எதிரிகளும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். இதன் பின்னணி என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு செல்லும் முன்பு பேசுகையில், அரவக்குறிச்சி தொகுதியில் செலவு செய்தது குறித்து 70 ஆயிரைம் போலிசை கூட கர்நாடகாவுக்கு அனுப்பட்டும். ஆட்சியே அவங்ககிட்ட இருக்கும் போது, பதில் சொல்ல வேண்டியது என் கடமை. வருவாய்த்துறை அதிகாரிகள், கலெக்டர், உளவுத்துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகாவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்தபோது ஒரு பைசா லஞ்சம் வாங்கினேனா? என்பதை தேடிப்பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க நான் தயாராகவே உள்ளேன்.

ஒரு மனிதனை எதிர்க்க இத்தனை பேரா?. தமிழக வரலாற்றில் முதன் முறையாக பார்க்கிறேன். இந்த மனிதன் ஏதோ சிஸ்டத்தை கலைக்கிறான் என்று அர்த்தம். நல்லதை நோக்கி போகிறேன் என்பதால் தினமும் என் மீது தாக்குதல் செய்கின்றனர். 2 போலீஸ் அதிகாரிகள் குழு அமைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் அண்ணாமலை, குடும்பத்தினர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா? வருமானம் எங்கிருந்து வருகிறது?. செல்போனை ஒட்டு கேட்கிறீர்கள்? என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

ரசிக்கவில்லை

ரசிக்கவில்லை

கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை, கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாகவே நான் பார்க்கிறேன். பாஜக வளர்ச்சியை அவர்கள் ரசிக்க விரும்பவில்லை என்பதை பார்க்கிறேன். கூட்டணி கட்சியாக யாராக இருந்தாலும் பாஜகவை அவர்கள் வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாளாகிவிடுவோம்.

எதிரிகள் இல்லை

எதிரிகள் இல்லை

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. இதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போதுதான் பாஜக வளர்ச்சி பெறும். அவரவர் கட்சிகளை வளர்க்கதான் இருக்கிறோம். அவர்களுக்கு (அதிமுகவினருக்கு) வளர்ச்சியை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் என்ற கவலை இருக்கிறது. அது தவறும் கிடையாது.தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என்றார்.

கருத்து வேறுபாடுகள்

கருத்து வேறுபாடுகள்

இதனிடையே இன்று டெல்லி சென்று திரும்பிய பின் பேசுகையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதே நோக்கம். ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக வளர வேண்டும் என்றே விரும்புகிறோம். பாஜக தலைவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை. பாஜக வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம். கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. கட்சியை வலுப்படுத்த நினைக்கும்போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கமானதுதான். பாஜகவுக்கும், எனக்கும் தனிப்பட்ட கட்சி தலைவர்கள் மீது மோதல் இல்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் என்றார்.

அண்ணாமலை

அண்ணாமலை

கடந்த இரண்டு நாட்களின் பேட்டிக்களை கவனித்தால் அண்ணாமலையே பாஜகவிற்குள் கருத்துவேறுபாடுகள் இருப்பதாகவும், சில மனஸ்தாபங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் கூட்டடணி கட்சியான அதிமுகவும் தங்கள் வளர்ச்சியை பாஜக தடுப்பதாக நினைப்பதையும் ஓபனாக கூறி உள்ளார். அண்ணாமலையை தவிர மற்ற முன்னணி பாஜக தலைவர்கள் அதிமுக கூட்டணியை கைவிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. இதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போதுதான் பாஜக வளர்ச்சி பெறும் என்று அண்ணாமலை கூறியிருப்பதை பொறுத்தி பார்க்க வேண்டி உள்ளது. அதேநேரம் கூட்டணி விவகாரத்தில் மேலிடம் எடுக்கும் முடிவின் படியே செயல்படுவோம் என்று கூறியிருப்பதால் அதிமுகவுடன் மோதல் போக்கு இனி அண்ணாமலையிடம் இருந்து இருக்காது என்றே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+