“அஸ்திரத்தை” எடுப்பாரா ஸ்டாலின்? திருப்பி அனுப்பிய ஆளுநர்.. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஒரே “சான்ஸ்”

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 142 நாட்கள் கழித்து தற்போது அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அரசுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்னவென்று அலசுவோம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கை இழந்த பல அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என பலர் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது.

அனுமதியளித்த உயர்நீதிமன்றம்

அனுமதியளித்த உயர்நீதிமன்றம்

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை விதிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது.

காலம் தாழ்த்திய ஆளுநர்

காலம் தாழ்த்திய ஆளுநர்

இதையடுத்து கடந்த 2022 அக்டோபர் மாதம் சட்டசபையில் அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அவசர சட்டத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது. இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கிறது.

ஒரே வாய்ப்பு

ஒரே வாய்ப்பு

ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவசர சட்டத்தில் திருத்தங்கள் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு மசோதாவைஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கே ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

162 வது சட்டப்பிரிவு

162 வது சட்டப்பிரிவு

அதுதான் அரசியலமைப்பின் 162 வது பிரிவு. சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் அவசரம் கருதி நிர்வாக ரீதியாக உத்தரவிட பிறப்பிக்க மாநில அரசுக்கு இந்த 162 வது அரசியலமைப்பு பிரிவு அதிகாரம் வழங்குகிறது. சட்டசபை இயங்காத நேரத்திலும் அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் கையெழுத்தை பெறலாம்.

அதிமுக அரசு செய்த விசயம்

அதிமுக அரசு செய்த விசயம்

இந்த சட்டப்பிரிவு இதற்கு முன் தமிழ்நாடு அரசால் பயன்படுத்தப்பட்டும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 45 நாட்கள் ஆகியும் அதற்கு அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.

7.5% இடஒதுக்கீடு

7.5% இடஒதுக்கீடு

இதற்கிடையே நீட் தேர்வு முடிவு வெளியாகி மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு 162 வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க அதை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

நீதிமன்றம் தலையிடலாம்

நீதிமன்றம் தலையிடலாம்

இதே விசயத்தை தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி விவகாரத்திலும் செயல்படுத்தலாம் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதே நேரம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226 இன் படி இதில் தவறு உள்ளதா என்பதை நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் விசாரணை செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+