5 மடங்கு வளர்ச்சி, 6 புது சாட்டிலைட் நகரங்கள்! வேற லெவலில் மாற போகும் சென்னை! பிளான் எல்லாம் சூப்பர்
சென்னை: சென்னை படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், நகரைச் சுற்றி விரைவில் அமையும் ஆறு புது சாட்டிலைட் நகரங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முக்கியமான நகரங்களில் ஒன்று சென்னை.. தேசியளவில் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை இப்போதும் படுவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் சென்னைக்கு வருகிறார்கள்.

இதன் காரணமாகச் சென்னை விரிவடைந்தே வருகிறது. இதற்கிடையே நகரைச் சுற்றி விரைவில் அமையும் ஆறு புது சாட்டிலைட் நகரங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐந்து மடங்கு விரிவாக்கம்: நமது சென்னை ஐந்து மடங்கு விரிவாக்கத்திற்குத் தயாராகி வருகிறது. அதாவது சென்னை பெருநகரத்தின் லிமிட் ஐந்து மடங்கி விரிவடைய உள்ளது. இதற்கிடையே இந்த விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதிகளில் தன்னிறைவு திட்டங்களைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்த உள்ளது. மேலும், அனைத்து தரப்பினரும் வாழும் ஒரு முழுமையான சுற்றுப்புறங்களை உருவாக்கும் லட்சியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம் ஆகிய புறநகர்ப் பகுதிகள் இப்போது சென்னை பெருநகர எல்லைக்குள் வர உள்ளது. இதன் மூலம் சென்னை பெருநகரத்தின் லிமிட் தற்போதுள்ள 1189இல் இருந்து 5904 சதுர கிலோமீட்டராக உயர உள்ளது. இந்த பகுதிகளில் பொருளாதார ஆய்வை நடத்தப்பட்டு, சுகாதாரம், கல்வி, வாழ்க்கை முறை, உள்கட்டமைப்பு, வேலைகள், போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றை கொண்ட பகுதிகள் உருவாக்கப்படும்.
ரிப்போர்ட்: இது குறித்து ஆய்வை மேற்கொள்ள ஆலோசகரை நியமிக்க சிஎம்டிஏ கடந்த வாரம் தான் டெண்டர் கோரியிருந்தது. பொருளாதாரம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் டேட்டோ ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டவர்கள் 24 வாரங்களில் இந்த ரிப்போர்ட்டை கொடுப்பார்கள், அதன் அடிப்படையில் ஆட்டோமொபைல், ஐடிஇ, ரியல் எஸ்டேட், பவர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் புதிய தொழில்களை உருவாக்கச் சாத்தியமான இடங்கள் அடையாளம் காணப்படும், இதன் மூலம் உள்ளூர் வேலைகளை அதிகரிக்கும்.
மேலும், ரியல் எஸ்டேட் எந்த பகுதிகளில் டெவலப் செய்யலாம் என்பதையும் இவர்கள் அடையாளம் காண உள்ளனர்.. தொழிற்சாலைகள் மட்டுமன்றி மக்கள் ஓய்வு நேரத்தைச் செலவிட எங்கே என்ன செய்யலாம் என்பது குறித்த ஆய்வுகளும் இதில் இடம் பெறும். நடைப்பயிற்சி, திறந்தவெளி பூங்கா எனப் பல வகையான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். வெறும் தரவுகளை வைத்து மட்டுமின்றி கள ஆய்வின் அடிப்படையிலும் இந்த விரிவான ஆய்வை செய்ய உள்ளனர்.
ஆறு புது சாட்டிலைட் நகரங்கள்: சென்னை பெருநகர லிமிட்டிற்குள் வரும் புது பகுதிகளில் ஆறு புதிய சாட்டிலைட் நகரங்களையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுகள் சாட்டிலைட் நகரங்களை வலுப்படுத்த உதவும். சிஎம்டிஏ உறுப்பினர் அன்ஷுல் மிஸ்ரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சென்னையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். முக்கிய நகரப் பகுதிகளின் நெரிசலைக் குறைப்பது மற்றும் முக்கிய நகரப் பகுதிகளில் உள்ள தொழில்களை மற்ற பகுதிகளுக்கு மாற்றுவதன் மூலம் வளர்ச்சியைப் பரவலாக்குவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.
உதாரணமாகப் புதுப்பேட்டையில் உள்ள ஆட்டோமொபைல் மையம் நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் நிலையில், அது புறநகருக்கு மாற்றப்படலாம். அதேபோல ரிச்சி ஸ்ட்ரீட் உள்ளிட்ட பகுதிகளும் கூட புறநகருக்கு மாற்றப்பட்டால் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications