"பிளான் கொங்கு".. செந்தில் பாலாஜி ஆப்சென்ட்.. ஸ்டாலின் தந்த அசைன்மென்ட்.. உள்ளே வந்த 2 புள்ளிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி உள்ள திமுக கொங்கு மண்டலத்தில் வரும் நாட்களில் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

What is DMK CM Stalin planning for Kongu without Senthil Balaji ahead of Lok Sabha 2024?

லோக்சபா தேர்தல்: இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் லோக்சபா தேர்தல் பற்றி பேசி இருக்கிறார். அதில், தேர்தல் பணிகளை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. லோக்சபா தேர்தல் பணிகள் பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். பூத் கமிட்டிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டிக்கு சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள். லோக்சபா தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 40க்கு 40 நம்முடைய இலக்கு. அதற்கான பணிகளை இப்போதே செய்திடுங்கள்.

எனக்கு தேர்தல் பணிகள் சுணக்கம் குறித்து எந்த புகாரும் வரக்கூடாது. கவனமாக பணிகளை செய்திடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று கூட்டத்தில் பேசி இருக்கிறார். அதன்படி லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டியை அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை என்றும் அவர் கூறி உள்ளாராம்.

கொங்கு மண்டல பிளான்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி உள்ள திமுக கொங்கு மண்டலத்தில் வரும் நாட்களில் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவின் மிக முக்கியமான அமைச்சராக கருதப்பட்டவர் செந்தில் பாலாஜி. லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுக வெல்ல இவர் பெரிய காரணமாக இருந்தார். அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

கரூரில் வரிசையாக அடுத்தடுத்து திமுக ஸ்வீப் செய்ய பெரிய காரணம் இவர்தான். ஆனால் இப்போது செந்தில் பாலாஜி கைதாகிவிட்டார். இதை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்று ஆலோசனைகள் செய்து வருகிறதாம். அதன்படி முதலில் கொங்கு மண்டலத்தில் இருந்து ஒரு ரிப்போர்ட் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் செந்தில் பாலாஜி என்ற தனிப்பட்ட நபர் குறி வைக்கப்பட்டதை மக்கள் விரும்பவில்லை. அவரை இந்த அளவிற்கு அலைக்கழித்ததை மக்கள் விரும்பவில்லை.

அரசியலில் தவறு செய்யாதவர்கள் இல்லை.. அவர் தவறுசெய்தாரா இல்லையா என்பது இருக்கட்டும்.. ஆனால் இவர் ஒருவரை மட்டும் இப்படி போட்டு குறி வைத்ததை கொங்கு மக்களே விரும்பவில்லை என்று கூறப்படுகிறதாம். அவர் இருந்த போது பணிகள் வேகமாக நடந்தன, அவர் இல்லாமல் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்றும் கருதுகிறார்களாம்.

இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் ஆட்சி ரீதியாக பணிகளையும், கட்சி ரீதியாக பணிகளையும் செய்ய இரண்டு அமைச்சர்கள் குழுவை கொங்கில் போட முடிவு செய்து உள்ளாராம். செந்தில் பாலாஜியை எதற்காக டார்கெட் செய்தார்களோ.. அது பாஜகவிற்கு கிடைத்துவிட கூடாது. கொங்கில் பாஜக கால் பதிக்கவே கூடாது என்று ஸ்டாலின் சில முக்கியமான மாஸ்டர் பிளானை வரும் காலத்தில் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக கொங்கில் விரைவில் திமுக தேர்தல் பணிகளை செய்யும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+