5 ஆயிரத்திற்கு ராஜவிருந்து.. குடும்ப விபசாரம் என்றால் என்ன? சென்னையில் எப்படி தலை தூக்கியது?
சென்னை: சென்னையில் குடும்ப விபசார தொழில் எப்படி நடந்தது, பெண்கள் எப்படி அதனை செய்கிறார்கள், அவர்கள் யார் ? போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னையில் விபச்சாரம் செய்பவர்கள் ஓட்டல்களில் செய்தால் சிக்குவதால், நூதன முறையை கையாண்டுள்ளனர். அதுதான் வீடுகளை வாடகைக்கு பிடித்து குடும்பம் போல் தங்கி விபச்சாரம் செய்வது. அப்படித்தான் சில பகுதிகளில் பெண்கள் குடும்ப விபச்சாரம் செய்து வந்துள்ளார்கள். இது தொடர்பாக கடந்த வாரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ஆய்வு செய்து, கைது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையும் எடுத்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் தான் இந்த தொழில்களில் ஈடுபடுவதாகவும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இவர்கள் குடும்ப விபசாரத்தை மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

சரி குடும்ப விபசாரம் என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம்: ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி விபச்சாரம் அனுபவித்தபடி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை அழகிகள் உல்லாசப்படுத்துவார்களாம். இதுதான் 'குடும்ப விபசாரம் என சொல்கிறார்கள்.
இந்த மாதிரியான விபச்சாரம் சென்னையில் தற்போது தான் நடக்கிறது என்று இல்லை.. ஏற்கனவே நடந்துள்ளது. அவர்களை போலீசார் கைது செய்தனர். பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள். ஆனால் அடிக்கடி இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளதாம்.
சென்னையில் எங்கு இதுபோன்ற குடும்ப விபசாரம் நடக்கிறது என்று பார்த்தால் வளசரவாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் இந்த மாதிரி குடும்ப பெண்களால் விபச்சாரங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். சந்தேகம் வராத அளவிற்கான பகுதிகளை தேர்வு செய்வார்களாம். தனி வீடுகளை தேர்வு செய்தும் இதுபோன்று விபச்சாரத்தை அரங்கேற்றுவதாக சொல்கிறார்கள்.
இந்த குடும்ப விபச்சாரத்திற்கு பெண்கள் எப்படி வருகிறார்கள். இவர்கள் யார் என்பது குறித்து விசாரித்த போது, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. சென்னைக்கு வேலை தேடி வருவது போல் குடும்ப பெண்களே வருகிறார்களாம். அவர்களின் தொழிலாகவே இந்த விபசாரம் உள்ளதாகவும், வேலை தேடுவது போல் வந்து வீடு எடுத்து தங்கி விபச்சாரத்தை சத்தமில்லாமல் செய்கிறார்களாம். நன்றாக சம்பாதித்துவிட்டு ஊருக்கு போய்விட்டு வந்து மீண்டும் வந்து இதேபோல் சம்பாதிப்பார்களாம்.
போலீஸ் என்ன செய்யும்.. பொதுவாக இதுபோன்ற குற்றவாளிகளை பிடிக்கும் போலீசார் உடனே அரசின் காப்பகத்தில் சேர்த்துவிடுவார்கள்.
அவர்களோ தாங்கள் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பிவிட்டு, அரசின் காப்பங்களிலேயே தங்கி இருப்பார்கள். பின்னர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்ற பின் செந்த ஊருக்கு போவார்கள். அங்கிருந்து சில மாதங்களிலேயே மீண்டும் வந்து வேறுபகுதியில் குடும்ப விபச்சாரத்தை செய்வார்களாம்.
அப்படித்தான் சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் குடும்ப விபசார தொழில் செய்து வந்த மூன்று பெண்கள் மீட்கப்பட்டனர். வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் 2பேரை பிடித்தனர். அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைதானார். இதேபோல் மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் ஒரு பெண்ணை பிடித்தனர். அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரசாந்த் (30) என்ற தரகர் சிறையில் அடைக்கப்பட்டார். காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை அழகிகள் குடும்ப விபச்சாரம் நடத்திய விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications