மகனும் தோத்தாச்சு.. சிறுத்தைகளிடமும் வீழ்ந்தாச்சு.. ராமதாஸ் இனி என்ன செய்ய போகிறார்?
வெற்றிகரமான தோல்விக்கு பிறகு ராமதாஸ் என்ன செய்ய போகிறார்?
Recommended Video
சென்னை: வெற்றிகரமான தோல்வின்னு சொல்ற மாதிரிதான், பாமகவுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இனிமேல் ராமதாஸ் என்ன செய்ய போகிறார்? என்பதுதான் கேள்வியே!
கடந்த முறை பாமக 5.3 சதவீத வாக்குகளை அதாவது பாஜகவைவிட அதிகம் பெற்றிருந்தது. போனமுறை சட்டசபைத் தேர்தலில் 85 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைய முக்கிய காரணமே பாமகதான். 27 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை பறித்த பாமக, பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடிந்தது.
அந்த வகையில் பார்க்கும்போது, இப்போதும் பாமகவின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக வட மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையும் அதிகமானது.

திண்ணை பிரச்சாரம்
ஆனால் எல்லாமே தவிடுபொடியாகிவிட்டது. வாக்கு வங்கி போன தேர்தலை விட இந்த முறை அதிகமாகி உள்ளது. இதற்கு காரணம், அன்புமணியின் திண்ணை பிரச்சாரமும், மக்களை கடந்த 3 வருடங்களில் நேரடியாக சந்தித்ததும்தான்!

வாக்கு சதவீத உயர்வு
களப்பணிகளை கண்ணுக்கு தெரியாமல் அளவுக்கு அதிகமாகவே செய்துவந்துள்ளது பாமக. மேடை போட்டு, முழக்கமிட்டு, கொள்கைகளை தாரை, தப்பட்டை வைத்து தம்பட்டம் அடிக்காமல், சைலண்ட்டாக வேலை பார்த்து வந்ததன் பலன்தான் இந்த வாக்கு சதவீத உயர்வும்! ஆனால் டாப்-5-ல் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு இது மட்டும் போதாதே! வாக்கு சதவீத அதிகரிப்பால் வன்னிய சமுதாய மக்கள் ராமதாஸை கைவிடவில்லை என்றாலும், தாறுமாறு கொள்கைகளால் அவரை பொதுமக்கள் கைவிட்டுவிட்டார்கள் என்றே தெரிகிறது.

நிலைப்பாடு
முதலில் ஒரு கொள்கை பிடிப்பு வேண்டும். 5 வருஷத்துக்கு ஒருமுறை மாறி மாறி கட்சிகளை விமர்சிப்பது என்பதுபோய், 6 மாசத்திலேயே விமர்சிப்பது என்ற நிலைக்கு ஆளானார். மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு சம்பவத்தையும் விலாவரி அறிக்கைகளாக வெளியிட்டு கண்டித்தும் வந்தவரின் நிலைப்பாடு மாறியது பொதுமக்கள் கண்கூடாக பார்த்தனர்.

ஒத்துழைப்பு
வரம்பு மீறிய வாசகங்களுடன் மீம்ஸ்கள் வெளிவந்தன. ராமதாசின் கூட்டணி தர்மத்தை மாற்று கட்சிகள் சரமாரி கண்டித்தன. அதிமுகவை மக்கள் நிராகரித்துள்ள நிலையில், ராமதாஸ் இனி எப்படி கூட்டணியுடன் ஒத்துழைப்பார்? டெல்லிக்கு மகனை கூட அனுப்பி வைக்க முடியாத நிலையில், மாநில அரசை எந்த அளவுக்கு இனி நம்புவார்? யாரை விமர்சித்து அரசியல் நடத்துவார்? இவரையே நம்பிக் கிடக்கும் லட்சக்கணக்கான வன்னிய பெருமக்களுக்கு எந்த மாதிரியான ஆறுதல் வார்த்தைகளை சொல்லுவார்?

காடுவெட்டி குரு
இந்த 2 வருடம் வன்னிய மக்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் ஆசுவாசப்படுத்தும், நம்பிக்கை தரும் செயல்களை ராமதாஸ் கையில் எடுப்பது அவசியம். காடுவெட்டி குருவைவிட வேறு யாரும் பாமகவுக்காக உழைத்துவிட முடியாது. கண்ணெதிரே அந்த குடும்பம் சிதைந்தும், அதை கண்டுகொள்ளாமல் விட்டதை நினைத்து வருந்த வேண்டும். யார் அதிகமாக சீட் தருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி என்ற கடந்த கால வரலாற்றினை மறப்பதும், ஒதுக்குவதும்தான் பாமகவுக்கு இனி நலம் தருவதாக இருக்க முடியும்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications