என்னங்க நடக்குது தவெகவில்.. என்னென்னமோ எதிர்பார்த்தாங்களே.. கடைசியில் இப்படி ஆகிடிச்சே? அப்போ விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியும், விஜயும் எடுத்த சில முடிவுகள் அக்கட்சியினரை கடுமையான கோபத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளாக்கி உள்ளது. கட்சியில் என்ன நடக்கிறது.. எதிர்பார்த்தது ஒன்று ஆனால் நடப்பது வேறொன்று என்று ரசிகர்கள் சொல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக நம்பியது. தமிழ்நாடு அதிகாரிகள் உள்ள SIT அமைப்பது சரியாக இருக்காது.. இதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெகவினர் கோரிக்கை விடுத்தனர்.

TVK Vijay

சைலன்ட் மோடுக்கு போன தமிழக வெற்றிக் கழகம்

பலியான குழந்தையின் அப்பா என்பவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் உருவாக்கிய அஸ்ரா கார்க் தலைமையிலான SITஐ கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் அடித்து ஆடும்.. தமிழக வெற்றிக் கழகம் ஆளும் திமுகவை இறங்கி அடிக்கும் என்றெல்லாம் கட்சியினர் எதிர்பார்த்தனர் .

1. சிபிஐ விசாரணைக்கு சென்ற பின்பும் கூட தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை.

2. விஜய் கரூர் செல்வார்.. இதற்காக அனுமதி கேட்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் விஜய் அதையும் செய்யவில்லை.

3. கரூர் செல்வதை பற்றி விஜய் ஒரு வார்த்தை பேசவில்லை.

4. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக்கிவிட்டு வெளியே வந்த பின் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரும் மீடியா முன் பேசவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் முன்பும் பேசவில்லை.

5. புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் ஆக்சன் எடுப்பார் .. அவர் தலைமறைவாக இருந்ததற்கு ஆக்சன் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.

6. புஸ்ஸி ஆனந்த் திரும்பி வந்த பின்.. கரூரில் பலியான மக்களின் புகைப்படங்களுக்காகவாது புஸ்ஸி ஆனந்த் மாலை போடுவார்.. அல்லது விஜய் மாலை போடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

7. கரூர் தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசுகையில், கரூர் தவெக பரப்புரை நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு அரசே காப்பாற்றியது. நான் எனது 50 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும்.

8. கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். வழக்கமான அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட கரூர் தவெக பரப்புரையில் கூடுதலாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவலர்கள், அதிகாரிகள் என அன்று மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர், என்று கூறினார். ஆனால் இதற்கும் கூட தவெகவில் இருந்து ஒருவர் கூட இதுவரை விளக்கமோ, பதிலோ தர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஒருவர் கூட விஜயின் பேச்சுக்கு இந்த நொடி வரை பதில் தரவில்லை. அந்த அளவிற்கு கட்சி செயல்படாமல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+