Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒற்றை ‛பென்குயின்'.. வலைதளங்களில் திடீர் டிரெண்ட் ஏன்? இன்ஸ்பிரேஷனுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் என எதை திறந்தாலும் தற்போது டிரெண்ட்டிங்கில் இருக்கிறது ‛ஒற்றை பென்குயின்' வீடியோ. திரும்பும் திசையெங்கும் பனி போர்வையாய் படர்ந்த அண்டார்டிகா பிரதேசத்தில் பென்குயின்களின் கூட்டத்தை விட்டு விலகி தனிப்பாதையில் மலையை நோக்கி நடைப்போடும் ‛ஒற்றை பென்குயின்' வீடியோ தான் அது.

பல கோடி பேரை கவர்ந்து இன்று உலகம் முழுவதும் ‛டாக் ஆப் தி' டவுனாக மாறியுள்ள இந்த ‛ஒற்றை பென்குயின்' வீடியோவின் உண்மை கதை, பலருக்கும் ஏராளமான கதைகளை சொல்லியுள்ளது. அப்படி என்ன நடந்தது? திடீரென இந்த பென்குயின் வீடியோ டிரெண்ட் ஆக என்ன காரணம்? வாங்க பார்க்கலாம்.

பென்குயின்.. தட்டையான உருவத்தில் வெள்ளை, கருப்பு நிறத்தில் கொழு கொழு தேகத்துடன் பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் அழகிய பறவை. பறவை தான்.. ஆனால் பறக்காது.. தண்ணீரரில் நன்றாக நீந்தும்.. என்னவொரு வினோதம் பாருங்க.. இந்த பென்குயின் படைப்பில்..

பனி பிரதேசத்தில் மட்டுமே வாழும் இந்த பென்குயினைபிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ‛இனம் இனத்தோடு சேரும்' என்பதை பென்குவின்கள் கூட்டம் கூட்டமாக பனி பிரதேசங்களில் வாழ்ந்து வருவதன் மூலமாக அறிந்து கொள்ளலாம். ஆம் பென்குயின் ஒரு Social bird.. எப்போதுமே கூட்டம் கூட்டமாக தான் வாழும்.

what-is-happening-in-the-social-media-viral-penguin-video-full-background-story-here

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களை மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது ‛ஒற்றை பென்குயின்' வீடியோ. தினமும் சோசியல் மீடியாவில் பல்வேறு விஷயங்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருப்பது தான் ‛ஒற்றை பென்குயின்'.

நேற்று முதல் சோசியல் மீடியாவில் டிரெண்ட்டாகி வரும் இந்த ஒற்றை பென்குயின் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை கவர்ந்துள்ளது. இந்த பென்குயின் வீடியோ திடீரென இப்போது சமூக வலைதளங்களில் ரைவலாவது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி பலரும் தேடி வருகின்றனர். அதற்கான விடையே இங்கு தருகிறோம்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் வெர்னர் ஹெர்ஜாக் (Werner Herzog). திரைப்பட இயக்குநர். இவர் 2007 ல் ஆவணப்படங்களை தயாரித்தார். Encounters at the End of the World என்ற ஆவணப்படத்தை எடுத்தார். அண்டார்டிகா பனி பிரதேசத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறையை மக்களுக்கு படம்பிடித்து காட்ட விரும்பினார்.

இதற்காக அண்டார்டிகாவில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்றார். அப்போது கருப்பு, வெள்ளை நிறத்தில் காணப்படும் அடலி பென்குயின் (Adelie Penguin) கூட்டத்தை அவர் பார்த்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் வெர்னர் ஹெர்ஜாக் மற்றும் அவருடன் சென்ற இன்னொரு நபரை பார்த்த பென்குயின்கள் பதறித்தான் போயின.

ஆள் நடமாட்டடே இல்லாத அண்டார்டிகாவில் திடீரென 2 பேர் வந்தால் என்ன தான் நினைக்கும் அந்த அந்த பென்குயின்கள்? தங்களை ஆபத்து நெருங்குவதாக உணர்ந்தன. இதனால் அந்த கூட்டத்தில் உள்ள எல்லா பென்குயின்களும் பாதுகாப்புக்காக கடல் பகுதியை நோக்கி தத்தி தத்தி நடைபோட்டன.

ஏனென்றால் பென்குயின்கள் தங்களின் உணவுக்காக கடலையே சார்ந்துள்ளன. இதனால் கடலை நோக்கி அனைத்து பென்குயின்களும் ஓட்டம் பிடித்தன. அப்போது ஒரு பென்குயின் மட்டும் வேறு ரூட்டை தேர்வு செய்தது. சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியை நோக்கி சென்றது.

இதனை கவனித்த வெர்னர் ஹெர்ஜாக் ஷாக்கானார். பொதுவாக பென்குயின்களுக்கு தனிச்சிறப்பு உள்ளது. கூட்டமாக பென்குயின்கள் இருக்கும்போது ஆபத்து ஏதேனும் வருவதாக உணர்ந்தால் குழுவாக சேர்ந்து வெளியேறும். முதலில் செல்லும் பென்குயினை தொடர்ந்து மற்ற பென்குயின்களும் அதே பாதையில் பாதுகாப்பான இடத்துக்கு பயணம் செய்யும். இதனை நாம் பல வீடியோக்களில் காணலாம்.

ஆனால் இங்கு நிலைமை அப்படியில்லை.. ஒற்றை பென்குயின் மட்டும் தனக்கு சம்பந்தமில்லாத மலையை நோக்கி தனியாக நடந்து சென்றது. இதனை வெர்னர் ஹெர்ஜாக் வீடியோவாக பதிவு செய்தார்.

மலைப்பகுதிக்கு சென்றால் அதற்கு உணவு, தண்ணீர் கிடைக்காது. இறுதியில் மரணம் தான் அந்த பென்குவினுக்கு பரிசாக கிடைக்கும் என்று உணர்ந்தார்.அது அந்த பென்குயினுக்கும் கூட தெரிந்திருந்தது. ஏனென்றால் நடந்த சம்பவம் அப்படி. அதாவது வெர்னர் ஹெர்ஜாக் அந்த பென்குயினை தடுத்து நிறுத்த அதன் முன் போய் நின்றார்.

அந்த பென்குயினோ, அவரை கண்டுக்கொள்ளவில்லை... அவரை கண்டுகொள்ளாமல் லாவகமாக ‛அவாய்ட்’ செய்துவிட்டு ‛ஓடிட்டேன்ல' என ஒதுங்கி தனது இலக்கை நோக்கி முன்னேறியது. இதனால் வேறி வழியின்றி அவர் அந்த பென்குயினை பிடித்தார். மீண்டும் அதனை பென்குயின்களின் கூட்டத்தில் விட்டார்.

ஆனால் அந்த பென்குயின் மட்டும் மீண்டும் மீண்டும் பென்குயின் கூட்டத்தை விட்டு வெளியேறி தனிப்பாதையில் மலையை நோக்கி புறப்பட்டது. தனிப்பாதையில் சென்றது. இதுதான் அந்த ஆவணப்படமாகும். தனது குடும்பத்தை விட்டு உணவுகள் நிறைந்த கடலை விட்டு மலையை நோக்கி பயணிக்க அந்த பென்குயினுக்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டது? அந்த பென்குயின் என்னவானது? என்பது தான் தற்போது அனைவரின் முன் எழும் கேள்வி.

இந்த கேள்வி தான் தற்போதைய டிரெண்ட்டிங்கிற்கு காரணம். இந்த வீடியோவை தற்போது பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ஏனென்றால், இந்த பென்குயின் கடைசியாக மீண்டும் தனது இனத்தோடு சேர்ந்தது பற்றியோ அல்லது உணவு இன்றி இறந்திருப்பது பற்றியோ வீடியோவில் எதுவும் இல்லை. இது பலருக்கும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

ஆங்கிலத்தில் ஒரு Quote சொல்வார்கள். "Humans brain loves story only when incomplete’’.. அதாவது முடிவுறாத கதைகளை மட்டுமே மனிதர்கள் அதிகம் ரசிக்கிறார்கள் என்பது இதன் பொருள். அதோடு உண்மையில் முடிவுறா கதைகளை மக்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவுகளை மாற்றியமைத்து கொள்ளலாம் என்பது தான்.

இதனால் தான் ஒற்றை பென்குயினுக்கு என்னவாகி இருக்கும், அதன் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கை அனுபவத்துக்கு ஏற்ப அதனை சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

இதனால் இந்த ‛ஒற்றை' பென்குவின் பற்றிய கதைகளும், ஸ்டேட்டஸ்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நெட்டிசன்களில் ஒரு தரப்பினரோ, ‛‛இந்த பென்குவின் மனச்சோர்வில் வாழ்க்கையை வெறுத்து தான் தனிப்பாதையில் சென்றது. அதுபோல் தான் நானும் உள்ளேன்'' என்று சோகமாக ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர்.

அதேபோல் இன்னொரு தரப்பினரோ, ‛‛இந்த பென்குயினுக்கு காதல் தோல்வி ஏற்பட்டு இருக்கும்'' என்று சிலர் காதல் தோல்வி பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டுள்ளனர். மற்றொரு தரப்போ, ‛‛இந்த பென்குயினால் மலை உயரத்துக்கு பறக்க முடியாது. ஆனாலும் நடந்தே மலையை அடைய முயற்சி செய்தது. பிக் சல்யூட்'' என்று கூறி மாஸ் பாடலை போட்டு வீடியோவை பரப்பி வருகின்றனர்.

மேலும் ‛‛கூட்டத்தில் ஒருவனாக இல்லாமல் வாழ்வோ, சாவோ துணிச்சலாக முடிவெடுத்துள்ளது. இது நம் அனைவருக்குமான பாடம். இதுதான் எனக்கான இன்றைய இன்ஸ்பிரேஷன்'' என்று வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இப்படியாக அந்த பென்குயின் தற்போது பலரையும் கவர்ந்து ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒத்துப்போய் உள்ளது.

இப்போது புரிகிறதா உண்மையில் இந்த பென்குவின் தனியாக சென்றதற்காக டிரெண்ட் ஆகவில்லை. தனியாக சென்ற அந்த பென்குயின் என்ன ஆனது என்ற Curiosity உடன் மக்கள் தங்களை பொருத்தி பார்ப்பதால் தான் அந்த பென்குயின் 19 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த பனிப்பிரதேசத்தில் நடந்து சென்று டிரெண்ட் ஆகிறது.

அதுமட்டுமின்றி இந்த பென்குயின் நம் வாழ்க்கைக்கும் சில பாடங்களை கற்று தருவதாக உள்ளது. சில கதைகளோடு முடிவுகள் நமக்கு தெரியாமல் இருப்பதே நல்லது. இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி ‛‛ பாதை கஷ்டமாக இருந்தாலும் இலக்கு முக்கியம்.. தடைகள் எத்தனை வந்தாலும் அதனை தவிடுபொடியாக்கி முன்னேற வேண்டும்''.. ‛‛சில நேரம் தனியாக தான் நடக்கணும். அது தோல்வி இல்லை. வலிமையை தரக்கூடிய இடம்.. புதுமையை தேடி செல்லும் பாதை''.. ‛‛தனியாக நடந்தாலும் தைரியம் இழக்க கூடாது.. எல்லோரும் எப்போதும் நம்முடன் வரமாட்டார்கள்''..

‛‛வேகம் முக்கியமில்லை.. தொடர்ந்து உயிர்ப்புடன் பிடித்ததை நோக்கி மெதுமெதுவாக செல்கிறோமா?''.. ‛‛கூட்டத்தோடு கூடி வாழ்வது சரிதான்.. ஆனால் அப்படி வாழ தயங்கினால் புதிய பாதையில் துணிவோடு பயணப்படு.. முயற்சியை கைவிடாமல் சொந்த உழைப்பில் நேர்மையாக முன்னேறு.. வெற்றி கிடைக்காவிட்டால் உங்களின் பயணம் எப்போதும் ரசிக்கப்படும்'' என் நம் வாழ்க்கை்கு உத்வேகம் அளிக்கும் பலவற்றை இந்த ஒற்றை ‛பென்குயின்' தந்து சென்றுள்ளது.

இந்த பென்குவின் குறித்த உங்களின் சுவாரசிய கற்பனையையும் மறக்காமல் இந்த செய்தியின் கமெண்ட்டில் பதிவிட்டு செல்லுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+