ரூ.6000 நிவாரண முகாம்களில் இதை கவனிச்சீங்களா? பணம் வாங்க போனவர்களுக்கு சர்ப்ரைஸ்.. இதுதான் அவசியம்
சென்னை: ரேஷன் கடைகளில் மழை வெள்ள நிவாரணமாக ரூ. 6000 வழங்கப்படும் நிலையில் அங்கே என்ன நடக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு - ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
"மிக்ஜாம்" புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.12.2023 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.
ரேஷன் கடைகள்: ரேஷன் கடைகளில் ரூ. 6000 வழங்கப்படும் நிலையில் அங்கே என்ன நடக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

1. ரேஷன் கடைகளில் மக்கள் வரிசையாக நிற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டோக்கனில் ஏற்கனவே நேரம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் அவசியமற்ற கூட்டம் ஏற்படவில்லை.
2. கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வேகமாக பணம் வாங்கிக்கொண்டு செல்ல முடிகிறது. ஏற்கனவே டோக்கன் உள்ளதால்.. உடனுக்குடன் பணம் வழங்கப்படுகிறது.
3. இதில் சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால்.. பெரும்பாலான ரேஷன் கடைகளில் அப்பகுதி கவுன்சிலர்கள் நேரத்திற்கு நேரம் பார்வையிடுகிறார்.
4. இதில் ஏற்படும் ஒரே குழப்பம் என்னவென்றால்.. நிவாரணத்திற்கு டோக்கன் கிடைக்காதவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதற்காக விண்ணப்பம் பூர்த்தி செய்து அவர்கள் மனு கொடுத்துள்ளனர். இதற்குத்தான் கொஞ்சம் கூட்டம் உள்ளது. மற்றபடி வேறு கூட்டம் இல்லை.
5. சில ரேஷன் கடைகளில் லைனில் நிற்பவர்கள் மீது வாகனங்கள் மோதாமல் இருக்க வசதியாக பேரிகேட்கள் போடப்பட்டு உள்ளன.
( உடனே கிளம்புங்க.. தென் மாவட்டங்களில் நிலைமை மோசம்.. உடனே பறக்கும் தலைகள்.. ஸ்டாலின் போட்ட உத்தரவு)
நிவாரணம் வழங்கப்படும்: இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000/- நிவாரணத் தொகை இன்று முதல் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் 13 இலட்சத்து 72 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 8 ஆயிரத்து 726 குடும்ப அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரத்து 952 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 149 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுவர். இதற்கென தமிழ்நாடு அரசால் 1486 கோடியே 93 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications