கொரிய பெண்களின் முகம் பளபளப்பாக இருக்க என்ன காரணம்..? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரிய அழகிகளை இணையத்தில் பார்க்கும் போது, அவர்களின் முகம் மட்டும் எப்போதும் பளபளப்பாக்கவே இருப்பதை நீங்கள் நோட் செய்திருக்கலாம். அவர்கள் ரொம்பவே ஈஸியான ஒரு ஹேக்கை பயன்படுத்தித் தான் இப்படி தங்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்கிறார்கள். அது என்ன என்பதைப் பார்க்கலாம்.

உலகெங்கும் இப்போது அழகுசாதன பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முகத்தைப் பொலிவுடனும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று பல்வேறு க்ரீம்கள் சந்தையில் விற்பனையில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த அழகுசாதன பொருட்களின் சந்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் 10 ரூபாய் தொடங்கிப் பல லட்சம் வரை பல வேரைட்டிக்களில் பல விதமான க்ரீம்கள் சந்தைகளில் உள்ளது.

 தென் கொரிய அழகிகள்

தென் கொரிய அழகிகள்

ஆனால், இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்தாமலேயே கூட முகத்தை நம்மால் பொலிவுடன் வைத்திருக்க முடியும். குறிப்பாக உலகளவில் தென் கொரிய அழகிகள் தான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்து உள்ளனர். கொரிய சீரியல்கள் இணையத்தில் ஹிட் அடிக்கும் நிலையில், அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எப்படி இவ்வளவு அழகாக உள்ளனர் என்று நமது ஆட்கள் உச்சு கொட்டத் தவறுவதில்லை. அதிலும் இந்த ஓடிடி தளங்களின் வருகைக்குப் பின்னர் கொரிய சீரியல்களை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த சீரியலில் வரும் நடிகர், நடிகைகள் எப்படி இந்தளவுக்கு அழகாக உள்ளனர் என்பதே பலருக்கும் கேள்வியாக உள்ளது.

 ஜாம்சு

ஜாம்சு

மேற்கத்திய நாடுகளில் முகத்தில் வயது முதிர்வு தோற்றம் ஏற்படுவதைத் தடுக்க பல க்ரீம்களை முன்னிறுத்தி வரும் நிலையில், தென் கொரியப் பெண்கள் 'ஜாம்சு' (Jamsu) என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள். இதை எப்படிச் செய்ய வேண்டும் கொரியாவைச் சேர்ந்த பலரும் இணையத்தில் விளக்கி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த முறை இப்போது பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. அதென்ன ஜாம்சு.. இதை எப்படிச் செய்ய வேண்டும். இதனால் யாருக்கு எந்தளவுக்குப் பலன் என்பதை விரிவாக பார்க்கலாம்.

 எப்படிச் செய்ய வேண்டும்

எப்படிச் செய்ய வேண்டும்

Jamsu என்றால் கொரிய மொழியில் 'நீரில் மூழ்குவது' என்று அர்த்தம். இதில் கூறப்பட்டதை போலவே முகத்தைத் தண்ணீரில் மூழ்குவதே ஜாம்சு ஆகும். இதை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்கிறீர்களா.. ரொம்பவே ஈஸி.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், முதலில் உங்கள் முகத்தில் வழக்கம் போல மேக்கப்பைப் போடுங்கள். அதன் பின்னர் அப்படியே ஐஸ் நிறைந்த குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை விடுங்கள். அதாவது முகம் முழுவதும் அந்த ஐஸ் நீருக்குள் இருக்க வேண்டும். இதன் மூலம் மேக்கப் கலையாமல் லாக் செய்ய முடியும். இது மேக்கப்பிற்கு ஒரு முழு டச்சும் கொடுக்கும்.

 என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இப்படிக் குளிர்ந்த நீரில் மூழ்குவதால், தண்ணீர் கூடுதல் மேக்கப்பை நீக்கி, உங்களுக்குப் பார்க்க இயற்கையானது போல இருக்கும் தோற்றத்தை அளிக்கிறது. ஐஸ் வாட்டர் வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்து சருமத்தில் அற்புதமான மாற்றங்களைச் செய்யும். மேலும் குளிர்ந்த நீர் திறந்த முகத்தில் இருக்கும் சிறு துளைகளை மூடுவதால் முகப்பருவைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் பிரபலங்கள்

ஏதோ கொரியப் பெண்கள் மட்டுமே இந்த முறையைப் பயன்படுத்துவதாக நினைத்துவிடாதீர்கள். இந்த முறை மிகப் பெரியளவில் பலன் கிடைப்பதாலேயே பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்களும் கூட இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். ஆம்.. பாலிவுட் அழகிகள் ஜாம்சு மூலம் தங்கள் முகத்தைப் பொலிவாக்கிக் கொள்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கூட இப்படி அவர் தண்ணீரில் முகத்தை மூழ்கடிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தினமும்

தினமும்

ஐஸ் குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் நடிகை கத்ரீனா கைஃப் தனது முகத்தை மூன்று முறை மூழ்கடிக்கும் வீடியோ அப்போதே இணையத்தில் டிரெண்டானது. ஒவ்வொரு நாளும் இப்படி அவர் செய்வாராம். இதுதான் அவரது அழகின் ரகசியமாம். சரி, அவர்களை விடுங்கள். இந்த எளிதான அழகு ஹேக்கை நீங்களும் வீட்டிலேயே முயன்று பார்க்கலாம்.. இதை எளிமையான முறையைப் பின்பற்றி நாமும் நமது முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+