‛ஓலக்கம்' தெரியுமா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்வர்களை குழப்பிய கேள்வி.. அர்த்தம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்வில் ,‛‛ஓலக்கம் என்னும் சொல்லின் வேர்ச் சொல்லை கண்டறிக'' என்று கேட்கப்பட்டு இருந்த கேள்வி தேர்வர்களை குழப்பியது. இந்த ‛ஓலக்கம்' என்பதன் அர்த்தம் என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது. மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.

what-is-meaning-of-olakkam-how-this-word-confuses-tnpsc-group-4-candidates-in-tamil-nadu

தேர்வுக்கு மொத்தம் 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 12.30 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. தேர்வர்களுக்கு

இந்நிலையில் தான் இன்றைய குரூப்-4 தேர்வில் ஒரு கேள்வியால் பல தேர்வர்கள் குழம்பி போயினர். அதாவது ‛‛ஓலக்கம்'' என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு ஆப்ஷனாக A- ஓல், B - ஓலம், C - ஓலகம், D - ஒட்டோலகம், E - விடை தெரியவில்லை என்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருந்தது.

what-is-meaning-of-olakkam-how-this-word-confuses-tnpsc-group-4-candidates-in-tamil-nadu

இந்த கேள்வியால் பலரும் குழம்பினர். தேர்வு முடிந்த நிலையில் பலரும் அதற்கான விடையை இணையதளங்களில் தேட தொடங்கினர். மேலும் சமூக வலைதளங்களில் அதுதொடர்பான மீம்ஸ்களும் வர தொடங்கின.

இறுதியாக ‛ஓலக்கம்' என்னும் சொல்லின் வேர்ச் சொல் என்பது ஆப்ஷன் ஏ - ஓல் என்பதாகும். மேலும் ஓலக்கம், ஓல் என்பது பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது. இது மன்னரின் அரசவையை குறிக்கும். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் தமிழ் அகராதிகளில் ஓலக்கம் என்ற வார்த்தை சபை மண்டபம், அத்தாணி மண்டபடம், திருச்சபை உள்ளிட்டவற்றை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஓலக்கத்தார் என்ற சொல்லும் இதற்கு முன்பு புழக்கத்தில் இருந்துள்ளது. ஓலக்கத்தார் என்பது அரசவையில் இருப்பவர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓலக்கம் என்ற இந்த சொல் பதிற்றுப்பத்துவில் இடம்பெற்றுள்ளது. ‛ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்பு கூறுதல்' என்று பதிற்றுபத்துவில் வருகிறது. அதன் அர்த்தம் என்னவென்றால் மன்னன் ஓலக்க இருக்கையில் அமர்ந்து சிறப்பு கூறுதல் என்பதாகும்.

அதேபோல் கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில், ‛‛இரவின் ஓலக்கம் நான் முகன் உலகத்துள் இருக்கும்' என்று சொல்லப்பட்டு இருக்கும். அங்கும் இந்த ஓலக்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+