Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#Exclusive அடுத்த ரவுண்டை ஆரம்பித்த ஓபிஎஸ்.. எடப்பாடி ‘ரீசார்ஜ்’ காலி! ஓபிஎஸ் டீம் சொல்லும் மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "ஓபிஎஸ்ஸுக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்தால், அவரும் டிடிவி தினகரனைப் போல தனிக்கட்சி ஆரம்பித்துக்கொண்டு சென்றுவிடுவார் என எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறார். இனி தான் ஓபிஎஸ் ஆட்டமே ஆரம்பமாகிறது" என ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் கொங்கு மண்டலம் மற்றும் மதுரையில் மாநாடு நடத்தவும், பின்னர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 What is O Panneerselvams next plan? Kolathur krishnamoorthy exclusive interview

இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கழக உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக் குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், புதிய பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்றும், அதன்பிறகு முறையான, நேர்மையான தேர்தல்கள்மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "ஓபிஎஸ்ஸுக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்தால், அவரும் டிடிவி தினகரனைப் போல தனிக்கட்சி ஆரம்பித்துக்கொண்டு சென்றுவிடுவார் என எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது. நாங்கள் தான் ஒரிஜினல் அதிமுக. கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு இன்னும் பணம் நிறைய தேவைப்படும்.

 What is O Panneerselvams next plan? Kolathur krishnamoorthy exclusive interview

திமுக இப்போது மிரட்டி மிரட்டி காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மொத்தமாக டைட் செய்யும்போது மொத்தமாக ஜெயிலுக்கு போய்விடுவார்கள். ஓபிஎஸ் தான் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரை உருவாக்கினார். அவரால் பதவி பெற்ற எல்லோரும் சேர்ந்து இன்று முதுகில் குத்துகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் பணத்தால் ரீசார்ஜ் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கூட்டங்களை நடத்தப் போகிறார் ஓபிஎஸ். தென் மாவட்டங்களில் மட்டும் ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு என்பது உண்மையல்ல. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியவரும். இப்போதே பலரும் ஓபிஎஸ்ஸுடன் பேசி வருகிறார்கள். நெல்லிக்காய் மூட்டையைக் கவிழ்த்துக் கொட்டியது போல திரண்டு ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும்.

ஏன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் ஒதுக்கி வைத்திருக்கிறார் ஈபிஎஸ்? பசும்பொன் தேவர் நினைவிடம், பூலித்தேவன் நினைவிடம், மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி ஏன் வரவில்லை? பயம், அங்கு வந்தால் திரும்பிச் செல்லமுடியாது. அந்த அளவுக்கு கொதிப்பில் இருக்கிறார்கள். தேவர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலர் தோற்றதற்குக் காரணம் தேர்தலுக்கு முன்பு எடப்பாடி அறிவித்த வன்னியர் சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு தான். தென் மாவட்டங்களில் ஈபிஎஸ்ஸுக்கு எதிரான அலை நிலவுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+