செம மேட்டரை கையில் எடுத்த ஓபிஎஸ்.. "மீண்டும் எழுவேன்".. திக் திக் மனதுடன் காத்திருக்கும் அதிமுக!
அதிமுகவை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த நடவடிக்கை என்ன
சென்னை: இதுவரை தான் போட்ட பிளானில் சறுக்கலை சந்திக்காத ஓபிஎஸ், தற்போது முதல்முறையாக அப்செட் ஆகி உள்ளார்.. எப்படியாவது இழந்த செல்வாக்கை மீட்டு விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.. அதற்காக சில முன்னெடுப்புகளையும் ஆரம்பித்துள்ளாராம்.
Recommended Video
கிட்டத்தட்ட கேபினட் அந்தஸ்துக்குரிய அளவுக்கு மதிப்பு வாய்ந்ததுதான் எதிர்க்கட்சி தலைவர் பதவி.. அதனால்தான் ஓபிஎஸ் விடாமல் அந்த பதவிக்காக போராடினார்.. தனக்கு போதுமான செல்வாக்கு இல்லை என்றதுமே, தனபாலை எதிர்க்கட்சி தலைவர் ஆக்கிவிடலாம் என்றுகூட யோசனை சொன்னார்.
கொங்கு பகுதியில் இருந்து தனபாலை பரிந்துரைத்தால், அதற்கு எப்படியும் எடப்பாடி தரப்பில் ஆதரவு கிடைக்கும் என்று கணக்கு போட்டார்..!

எதிர்க்கட்சி தலைவர்
ஆனால், எதுவுமே நடக்கவில்லை. இந்த வாக்குவாதம் முடிவுக்கு வராத நிலையில், டக்கென ஓபிஎஸ் வெளியேறியதாக தகவல்கள் வந்தன.. பிறகு மீண்டும் கூட்டம் கூடி, எடப்பாடி பழனிசாமி தான் எதிர்க்கட்சி தலைவர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. ஆனால், இந்த சமயத்தில் ஓபிஎஸ் அங்கு இல்லை என்றும், அவர் சம்மதத்துடன் இது நடந்ததா? என்றும் பல்வேறு சந்தேகங்கள் வட்டமடிக்கின்றன.

அதிர்ச்சி
இதெல்லாம்தான் ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை தந்துள்து.. கடைசி நிமிஷம்வரை முக்குலத்தோர் நிர்வாகிகளின் ஆதரவும் கிடைக்காமல் போனது அவருக்கு இன்னொரு ஷாக்... அதனால்தான், தன் செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிகளை கையில் எடுத்துள்ளாராம் ஓபிஸ்.. ஒருபக்கம் சசிகலாவை வைத்து காய் நகர்த்தல்கள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. மற்றொரு பக்கம், தர்மயுத்தம் போல ஏதாவது தொடங்கலாமா என்றும் யோசிக்கிறாராம்..

தினகரன்
அப்படி வியூகம் ஏதாவது அமைத்தால், அதற்கு டிடிவி தினகரன் போன்றோர் வெளிப்படையாக ஆதரவு தந்தால் நல்லா இருக்குமே என்ற எதிர்பார்ப்பு எண்ணமும் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளதாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவை விட்டு விலகிப் போன செல்வாக்கான பலருடன் பேச ஆரம்பித்திருக்கிறாராம். அவர்களை மீண்டும் அதிமுகவுக்குள் இழுத்து வந்து, அதன் மூலம் தனது கையை மீண்டும் ஓங்க செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஏமாற்றம்
இந்த முறை சீட் கிடைக்காமல் ஏமாந்த நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளவர்கள், என பலரையும் சந்தித்து தன் செல்வாக்கை உயர்த்த முயன்றுள்ளாராம்.. இதில் எந்த ரூட் அவருக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ் ஏதோ சீக்ரெட் பிளானில் இருப்பதாக மட்டும் கிசுகிசுக்கப்படுகிறது..!
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ்












Click it and Unblock the Notifications