பெரிய கண்டிஷன் போடும் பாஜக.. ‘தாமரை’க்கு ஓகே சொல்வாரா ஓபிஎஸ்? இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: தாமரை சின்னத்தில் நிற்குமாறு ஓபிஎஸ் தரப்புக்கு பாஜக கண்டிஷன் போடுவதாக கூறப்படும் நிலையில் இன்று தனது அணியினருடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ் தரப்பினரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், ஓபிஎஸ், அதிமுக கட்சிக் கரை இல்லாத வேட்டியையே அணிந்து வருகிறார். ஓபிஎஸ் காரிலும் அதிமுக கொடி தற்போது பயன்படுத்தப்படுவதில்லை.
ஓபிஎஸ் அணி: அதிமுக எனும் கட்சி பெயரையும், லெட்டர் பேடையும், இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கப்படிருப்பதன் காரணமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் தான் ஓபிஎஸ் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மேலும், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு என்ற பெயரிலேயே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்படுத்துவது, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை எழும்பூரில் நடைபெறும் என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் உறுதி: வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். பாஜகவை முழுமையாக ஆதரிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை தந்துள்ளது என்றும், மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்றும் கூறி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் ஓபிஎஸ்.
வரும் லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடக் கோரி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, டிடிவி தினகரன் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ் நிலைப்பாடு பாஜக கூட்டணியில் தொடர்வதாகவே இருக்கிறது. எனவே, பாஜக விருப்பப்படி, ஓபிஎஸ் அணியினர் தாமரை சின்னத்தில் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாஜக கூட்டணியில்: பாஜகவில், ஓபிஎஸ் தரப்புக்கு எத்தனை சீட் வழங்கப்படும் என்பதும் இதுவரை முடிவு செய்யப்படாத ஒன்றாக உள்ளது. தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு ராஜ்யசபா சீட்டையும் பாஜக உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ராஜ்யசபா எம்.பி ஆக்குவதாக பாஜக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக போடும் கண்டிஷன்: தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாஜக நிபந்தனை விதிப்பதாக வரும் தகவல் குறித்து நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "அதுபோன்ற நிபந்தனை ஏதும் இல்லை; தேர்தல் தேதி அறிவிக்காதபோது அதற்கான அவசியமே இல்லை. எந்த பேச்சுவார்த்தையும் முடிந்த பின்னர்தான் அறிவிப்போமே தவிர நடக்கும்போது அறிவிக்கமாட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் பங்கேற்கவில்லை: முன்னதாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆகியோர் பங்கேற்கவில்லை.
குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டத்தில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணி பேச்சில் சிக்கலா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இதுகுறித்து நேற்று பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "விருந்துக்கு வருபவர்கள் சாப்பிட்ட பிறகு வீட்டில் இருப்பவர்கள் கடைசியாகத் தான் சாப்பிடுவார்கள். அதுபோல பாஜகவினர் விருந்தினர்களைத் தான் அழைத்துள்ளார்கள். வீட்டில் இருப்பவர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்தார்.
சின்னம் ஓகே?: இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெறும் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது? எத்தனை சீட்களை கேட்டுப் பெறுவது? வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என்பது பற்றியெல்லாம் முக்கிய ஆலோசனைகள் நடைபெறலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications