ஒன்றோடு ஒன்று மோத போகும் நாடுகள்! இனி 7 கண்டங்கள் அல்ல ஒரே ஒரு கண்டம்தான்.. விஞ்ஞானிகள் ஷாக் கணிப்பு
சென்னை: உலகத்தில் இருக்கும் 7 கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய ஒற்றை கண்டமாக மாறும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். இதற்கு பாங்கேயா அல்டிமா அதாவது Pangea Ultima என்று பெயர் வைத்துள்ளனர்.
ஒரு காலத்தில் வேறு வேறு தோற்றத்தில் இருந்த நிலப்பரப்புகள் நிலநடுக்கம், சுனாமி, நில அடுக்கு நகர்வுகள், எரிமலை வெடிப்புகள் காரணமாக உருமாற்றம் அடைந்து தற்போது இருக்கும் தோற்றத்தை பெற்றுள்ளது.

இதன் காரணமாகவே வேறு வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி தற்போது இருக்கும் 7 கண்டங்கள் உருவாகின. நிலப்பரப்புகள் மோதியதால் மட்டுமே தற்போது இருக்கும் பல்வேறு மலைகளும் கூட தோன்றின.
நில அடுக்குகள் மாற்றத்தின்படி, சராசரியாக, கண்டங்கள் வருடத்திற்கு 5-10 செ.மீ நகருகின்றன. இது ஒவ்வொரு வருடமும் உங்கள் விரல் நகங்கள் வளரும் அதே நீளம் ஆகும். இந்த நிலையில் அடுத்த 240 மில்லியன் வருடங்களில் உலகில் இருக்கும் கண்டங்கள் எல்லாம் இங்கும் அங்கும் நகர்ந்து பல கடல்களை உருவாக்கும்.
அதன்பின் கடைசியில் கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே ஒரு கண்டம், ஒரே ஒரு கடல் என்ற நிலையை உருவாக்கும் என்று கணித்து உள்ளனர். ஐரோப்பா - ஆப்ரிக்கா ஒன்றாக இணையும். அதேபோல் ஆஸ்திரேலியா - ஆசியா ஒன்றாக இணையும். வடஅமெரிக்க - ஆப்ரிக்காவுடன் இணையும். இடையில் ஆப்ரிக்கா பிரிவது போல சென்றாலும் அது பிரிந்து சென்று வட அமெரிக்க கண்டத்துடன் இணையும் .
இதனால் ஏற்கனவே இருக்கின்ற கடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கடல் ஆகும். இதனால் ஒரே ஒரு கண்டம் உருவாகும். அந்த கண்டத்தின் நடுவில் சிறிய தண்ணீர் பகுதி இருக்கும். ஒரு பெரிய ஏரி போல தண்ணீர் பகுதி இருக்கும். அதுதான் இந்திய பெருங்கடல். மற்றபடி கண்டங்கள் எல்லாம் இணைந்து உருவான ஒற்றை கண்டத்திற்கு வெளியே முழுக்க முழுக்க கடல் மட்டும் சூழ்ந்து இருக்கும்.
இந்த கண்டத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு நதிகள் செல்லும். உலகமே ஒற்றை கண்டமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நவம்பர் 1982 இல் கிறிஸ்டோபர் ஸ்கோடெஸ் என்ற புவியியல் விஞ்ஞானி மூலம் இது கணிக்கப்பட்டது.
நில அடுக்குகள் நகர்வதை வைத்து கணிக்காமல் ஏற்கனவே நகர்ந்த நில அடுக்குகளை வைத்து இந்த கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர். ஒரு காலத்தில் உலகத்தில் உள்ள நில பகுதிகள் எல்லாம் ஒரு கண்டமாகவே இருந்து பின்னர் அவை நகர்ந்து சென்றன. அதேபோல் தற்போது மீண்டும் அவர் ஒரு கண்டம் ஆகும் என்று கணித்துள்ளனர். அடுத்த 240 மில்லியன் வருடங்களில் இது நடக்கும் என்று கணித்துள்ளனர்.
ஆப்ரிக்க கண்டம்: ஏற்கனவே தற்போது இருக்கும் ஆப்ரிக்க கண்டம் பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது இரண்டாக கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலப்பரப்பு பிரியும் பகுதியில் நீர் புகுந்து அங்கே பெரிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிகிறது: ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவதை ரிப்ட் என்று கூறுவார்கள். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவது. இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, இரண்டு பகுதிகளாக மாறிவிடும் . இதுவாக இரண்டு தட்டுகள் நகர பல நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த நகர்வு வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இப்படி தட்டுகள் நகரும் இடைப்பட்ட இடைவெளியில் பொதுவாக கடல் நீர் நுழைவது வழக்கம்.
தண்ணீர்: அப்படித்தான் கடல்கள் உருவாகும். தற்போது கிழக்கு ஆப்ரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது. அதன்படி 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்து உள்ளன. எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நில பிரிவு ஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும். இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் ஏற்கனவே பிரிய தொடங்கி விட்டனவாம். African Nubian, African Somali, Arabian ஆகிய அடுக்குகள் பிரிய தொடங்கி உள்ளன. இவை சாட்டிலைட்டில் மட்டுமின்றி கண்ணால் பார்க்கும் அளவிற்கு பிளவு தென்பட தொடங்கி உள்ளது.
உருவாகும் நாடுகள்: தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா, உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது மொத்தமாக பிரிய இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகும்.
பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இது வேகமாக நடக்கலாம். ஆனாலும் அடுத்த 500 வருடத்தில் இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இது நடக்கும். ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் திடீர் மாற்றங்கள் இதில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications