இது மட்டும் போதும்.. எல்லாமே தலைகீழாக மாறிடும்! எடப்பாடி எடுத்த "அஸ்திரம் 4".. ரகசியம் சொன்ன ரரக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த கூட்டணி குறித்து முதல்முறையாக எடப்பாடி ஓப்பனாக பேசினார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் 4 முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

நேற்று முதல்நாள் நாமக்கல்லில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எங்களை நேரடியாக எதிர்க்க தெம்பு, திராணி இல்லாமல் வழக்கு போடுகிறார்கள். அடுத்து வருகின்ற எந்த தேர்தல்களாக இருந்தாலும், அதிமுகதான் வெல்லும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம்.

திமுக தலைமையில் இந்த மெகா கூட்டணி அமைக்கப்படும். அதற்கு பிள்ளையார் சுழி போடும் கூட்டமாகவே இந்த கூட்டம் இருக்கும், என்று எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

4 விஷயங்கள்

4 விஷயங்கள்

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை மீட்டு எடுப்பதற்காக முக்கியமான 4 பணிகளை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மெகா கூட்டணிக்காக பேச்சுவார்த்தைகளை நடத்துவது, சில கட்சிகளை சமாதானம் செய்வது, அதிருப்தியாளர்களை சரி கட்டுவது, பொதுக்கூட்டங்களை மாநிலம் முழுக்க நடத்துவது என்று 4 முக்கியமான பணிகளை அவர் செய்ய இருக்கிறாராம். நடந்து முடிந்த நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி உற்சாகத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

இது தொடர்பாக அதிமுகவை சேர்த்த ரத்தத்தின் ரத்தங்கள் சிலர் நம்மிடம் ரகசியத்தை உடைத்தனர். அவர்கள் சொன்ன அந்த 4 விஷயங்கள் பின்வருமாறு, 1 மெகா கூட்டணி - அதிமுக மெகா கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எப்போதும் திமுகதான் கூட்டணிகளை வலுவாக அமைக்கும். அதே திமுகதான் 2015ல் கூட்டணி வைக்க முடியாமல் போக, அதை பயன்படுத்தி அதிமுக வென்றது. அதே பார்முலாவை எடப்பாடி கையில் எடுக்க நினைக்கிறார்.

கூட்டணி

கூட்டணி

திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளை தன் பக்கம் இழுக்க பார்க்கிறார். திமுகவில் உள்ள சாதி ரீதியான சில கட்சிகளை, அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை தன் பக்கம் இழுத்தால், தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும். அடியோடு பார்முலாவை இது மாற்றும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். இரண்டாவதாக பொதுக்கூட்டங்களை மாநிலம் முழுக்க எடப்பாடி நடத்த இருக்கிறாராம். அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து இந்த பொதுக்கூட்டங்கள் மாநிலம் முழுக்க நடத்தப்பட உள்ளன.

பொதுக்கூட்டங்கள்

பொதுக்கூட்டங்கள்

கொங்கு மண்டலத்தில் தொடங்கி பின்னர் நிலைமை சரியானதும் தென் மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள். 50க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களை அவர் நடத்துவார் என்று ரத்தத்தின் ரத்தங்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்கிறார்கள். இது போக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை சமாதானம் செய்ய எடப்பாடி தயாராகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

சமாதானம் பேசுவார்

சமாதானம் பேசுவார்

அதிமுகவுடன் ஏற்பட்ட மோதலால் பிரிந்து சென்ற தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சமாதானம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டும் வருகிறாராம். பாஜக தானாக கூட்டணியில் இணைந்துவிடும். ஆனால் மற்ற கட்சிகளையும் பேசி சமாதானம் செய்ய வேண்டும். அதிமுக கொள்கையோடு ஒத்துப்போகும் மற்ற கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.

கடைசியில் அஸ்திரம்

கடைசியில் அஸ்திரம்

இது போக கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை நேரில் சந்தித்து பேசி சமாதானம் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம். இந்த மாதம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில் நிர்வாகிகளை சந்தித்து, அதிருப்தியில் இருப்பவர்களை அவர் சமாதானம் செய்ய இருக்கிறாராம். முக்கியமாக தென் மண்டல நிர்வாகிகள் பலரை எடப்பாடி சந்திப்பார் என்கிறார்கள். இது நான்கும் சரியாக நடக்கும் பட்சத்தில் அரசியல் நிலவரம் அப்படியே தலைகீழாக மாறும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக நம்பிக்கொண்டு இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+