2ம் கட்ட தலைகளுக்கு செக்.. போன் கூட பேச முடியல.. சீமானை பார்க்க குவிந்த தலைகள்.. அதிரி புதிரி என்ஐஏ
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் நடக்கும் ரெய்டுக்கு இடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை காண கட்சியின் சில நிர்வாகிகள் அவரின் வீட்டில் குவிந்து உள்ளனர்.
ரெய்டுக்கு காரணம் என்ன?: நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைக்கு காரணமாக.. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த புகாரின் காரணமாக சோதனை என தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக சில அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பிய நிதி காரணமாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குவிந்த புள்ளிகள்: நாம் தமிழர் கட்சி பொதுவாக வெளிநாட்டு நிதியை அதிகம் பெறக்கூடிய கட்சி. வெளிநாட்டில் அந்த கட்சிக்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளனர். முக்கியமாக வெளிநாட்டு தமிழர்கள் பலர் இவர்களுக்கு நிதி கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில்தான் நாம் தமிழர் கட்சிக்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதி தொடர்பாக என்ஐஏ விசாரணை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பி உள்ளது.
சீமான் வீட்டில் குவிந்த தலைகள்: இதையடுத்து சீமானை சந்திக்க கட்சி நிர்வாகிகள் அவரின் வீட்டில் குவிந்து வருகின்றனர். நாம் தமிழரின் இரண்டாம் கட்ட தலைகள் பலரும் ரெய்டில் சிக்கி உள்ளனர். இவர்களின் போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வீட்டில் இருக்கும் முக்கிய ஆவணங்கள், லேப்டாப் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்களால் சீமானிடம் பேச முடியவில்லை. ரெய்டில் சிக்காத மற்ற தலைகள் சீமானை சந்திக்க கட்சி நிர்வாகிகள் அவரின் வீட்டில் குவிந்து வருகின்றனர்.
யார் வீட்டில் எல்லாம் ரெய்டு?: இன்று அதிகாலை திருச்சியில் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் இருந்துதான் அப்படியே நூல் பிடித்து என்ஐஏ மற்ற நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை செய்தது.
சாட்டை வீட்டை தொடர்ந்து அங்கு கிடைத்த ஆவணங்கள், போன் பேச்சுக்கள் வழியாக இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோரிடம் என்ஐஏ விசாரணை செய்தது. அவர்களின் வீடுகளிலும் ரெய்டு செய்தது.,
அங்கே கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தென்காசியை சேர்ந்த மதிவாணன், கோவையில் முருகன் மற்றும்நாதக முன்னாள் நிர்வாகி ரஞ்சித் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையில் இருந்து இங்கே அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு செய்து வருகிறது.
அந்த வகையில் இன்று அதிகாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியின் டாப் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ தீவிர ரெய்டுகளை நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு நிதி தொடர்பாகவே விளக்கம் கேட்டு நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பி உள்ளதாம். இன்னொரு பக்கம் கோவை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். ஆலாந்துறை ஆர் ஜி நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியின் ரஞ்சித் என்பவரது வீட்டில் காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்ஐஏ ரெய்டு ஸ்டைல்: 30 நிமிட கேப்பில் அடுத்தடுத்த ரெய்டுகள் நடக்கின்றன. பொதுவாக என்ஐஏ என்பது தேசிய விவகாரத்தில் மட்டுமே ரெய்டு செய்யும். அதாவது தீவிரவாதம், வெளிநாட்டில் இருந்து பணம் பெறுதல், மணி லாண்டரி, கிளர்ச்சி இயங்களுடன் தொடர்பில் இருப்பது, பாகிஸ்தான், சீனாவுடன் தொடர்பில் இருப்பது, நாட்டிற்கு எதிராக சதி திட்டம் போடுவது, நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பது, உள்நாட்டு அமைதியை குலைக்க விரும்புவது போன்ற காரணங்களால் என்ஐஏ ரெய்டுகளை நடத்தும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications