உடலுறவு கிடையாது.. இந்திய தம்பதியிடம் அதிகரித்து வரும் ‛Silent Divorce'.. அப்படினா என்ன? ஷாக்
சென்னை: இந்தியாவில் ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தாலும் கூட அவர்கள் இடையே பேச்சுவார்த்தை இருப்பது இல்லை. தாம்பத்தியம் இருப்பது இல்லை. கணவனிடம் இருந்து மனைவிக்கு கிடைக்க வேண்டிய அன்பும், மனைவியிடம் இருந்து கணவனுக்கு கிடைக்க வேண்டிய அன்பும் பரிமாறப்படுவது இல்லை. வெறுமனே திருமணம் செய்து விட்டோம். குழந்தைகள் பிறந்துவிட்டது. இந்த சமூகத்துக்கு பயந்தும், குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தும் பலரும் கடமைக்கு கணவன் - மனைவியாக வாழும் ‛சைலன்ட் விவாகரத்து' இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த ‛சைலன்ட் விவாகரத்து' என்பது என்ன? எப்படி உருவாகிறது? பிரச்சனையை தீர்ப்பது எப்படி? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
திருமணம்.. ‛‛உனக்கு நான்.. எனக்கு நீ'' என்ற ஒற்றை நம்பிக்கையில் இருமனங்களை இல்லற வாழ்க்கையில் இணைக்கும் அற்புத நிகழ்வு. மாமா பையன், மாமன் மகள், அத்தை மகன், அத்தை மகள் அல்லது உடன் படித்தவர், ஒன்றாக வேலை செய்தவர்கள் இல்லாவிட்டால் யார் என்றே தெரியாத ஒரு ஆண், பெண்ணை கரம் பிடித்தாலும் அனைவரின் எண்ணங்களும் ஒன்று தான். ‛‛உனக்கு நான்.. எனக்கு நீ''.

திருமண வாழ்க்கை தொடக்கத்தில் இருப்பது போல் மகிழ்ச்சியாக தான் கடைசி வரை நீடிக்கிறதா? என்று கேட்டால் பலரது பதில் ‛இல்லை' என்பதாக தான் இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் அன்பு, பாசம், அரவணைப்பு ஆண்டு கடக்க கடக்க மெல்ல மறந்து போய் விடுவதாகவும், அதற்கான காரணங்களான பலவற்றையும் தம்பதிகள் பட்டியலிடுகின்றன.
ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையேயான மொத்த பாசமும் குறைந்து பூஜ்ஜியமாகிறது. ஆனாலும் கூட அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சகித்து கொண்டு வாழ்கின்றனர். இதனை ‛Silent Divorce' என்கின்றனர். இந்த ‛சைலன்ட் விவாகரத்து' நம் நாட்டில் பல குடும்பங்களில் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதாவது ஒரு வீட்டில் கணவன் - மனைவி வசித்து வந்தாலும் கூட அவர்கள் கணவன் - மனைவி போல் வாழ்வது இல்லை. வீட்டில் ஒன்றாக இருவரும் இருப்பார்கள். ஆனால் அதிகம் பேசிக்கொள்வது இல்லை. ஒரே வீட்டில் நான்கு சுவருக்குள் அருகருகே இருந்தாலும் மனம் விட்டு பேசிக்கொள்வது இல்லை. சாப்பாடு தயார். கடையில் ஏதாவது வாங்க வேண்டுமா? என்ற அடிப்படையில் மட்டுமே இருக்கும். அவர்கள் இடையே சிரிப்பு இருக்காது. அக்கறையும் இருக்காது.
கடமைக்கு மட்டுமே கணவன் - மனைவியாக வாழ்வார்கள். உணர்வுப்பூர்வமான தாம்பத்தியம், தொடுதலும் இருக்காது. இவர்கள் வெளிநபர்களின் பார்வையில் கணவன் - மனைவியாகவும், சட்டத்தின் பார்வையில் கணவன் - மனைவியாக இருப்பார்கள். ஆனால் உண்மையில் வீட்டுக்குள் உடல் ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அப்படி இருப்பது இல்லை. இருவரும் அந்நியர்கள் போல் வாழ்வார்கள்.
அதேவேளையில் திருமண வாழ்க்கையை விட்டு இருவரும் வெளியேற விரும்புவது இல்லை. இந்த உறவினர்கள் என்ன சொல்வார்கள்? சமூகம் தவறாக பேசும் என்பதற்காக தங்களின் பிரிவை காரணம் காட்டி அவர்கள் விவாகரத்துக்காக நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறுவது இல்லை. மேலும் உறவினர்களிடம் தங்களின் பிரச்சனைகளை காட்டாமல் இருக்க மட்டும் நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக செல்வார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகும் மீண்டும் அவர்கள் பேச்சை குறைந்து ‛சைலன்ட் மோடுக்கு' செல்வார்கள். இப்படி வீட்டிலேயே சரியாக பேசாமல் கணவன் - மனைவியாக வாழ்வார்கள் இது தான் ‛சைலன்ட் விவாகரத்து'.
குறிப்பாக தற்போது கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் ஈகோ பிரச்சனையால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது. அதேபோல் கணவன் மீது மனைவியும், மனைவியின் மீது கணவனும் அக்கறை கொள்ளாமல் இருப்பதும் இந்த ‛சைலன்ட் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தற்போது நம் நாட்டில் உள்ள பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை ‛மவுன விவாகரத்து' அதிகரித்துள்ளதாக திருமணம் சார்ந்த விஷயங்களில் கவுன்சிலிங் கொடுப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி டெல்லியை சேர்ந்த மனநல மருத்துவரும், திருமண ஆலோசகருமான நிஷா கண்ணா கூறுகையில், ‛‛தற்போது சைலன்ட் விவாகரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பல கணவனும், மனைவியும் அன்பு, புரிதல் உள்ளிட்டவற்றுக்காக திருமணம் என்ற உறவில் இருப்பது இல்லை.
மாறாக குழந்தைகள், சமூக அழுத்தம், நடைமுறை சிக்கல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் திருமண உறவில் நீடித்து வருகின்றனர். கணவன் - மனைவி இடையேயான உறவின் சாராம்சம் குறைந்து வருகிறது. சைலன்ட் விவகாரத்தில் இருப்போர் வீட்டிலேயே தனித்தனியான வாழ்க்கையை வாழ்கின்றனர் '' என்றார்.
குருகிராமை சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் கணவன் - மனைவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் சுவர்ணா வர்தே கூறுகையில், ‛‛தங்களை பற்றிய தவறான கருத்தை தவிர்ப்பதற்காக பலரும் விவாகரத்து பெறாமல் தொடர்ந்து திருமண உறவில் நீடித்து வருகின்றனர். பொதுவாக விவாகரத்து என்பது தோல்வியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதோடு விவாகரத்து பெற்ற பிறகான வாழ்க்கையை நினைத்து கவலை கொள்கின்றனர். இதனால் பலரும், கணவன் - மனைவி போல் வெளியுலகிற்கு காட்டி கொள்கின்றனர். இது மனச்சோர்வு, பதற்றம், போதைப்பொருள், கள்ள உறவு உள்ளிட்டவற்றுக்கு காரணமாக அமையலாம்.
'' என்றார்.
இந்த சைலன்ட் விவாகரத்து மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இது கணவன் - மனைவி இடையே மனக்கசப்பை அதிகரிக்கும். இருவரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும். ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழாமல் தனிமையில் இருப்பது விரக்தியை ஏற்படுத்தும். மனேசோர்வை அதிகரிக்கும். மேலும் அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்காமல் பொய்யான வாழ்க்கையை பால பாழக்கி குடும்பத்தை பாழாக்கிவிடும். இது ஒரு ‛ஸ்லோ பாய்சன்'. இந்த ‛சைலன்ட் விவாகரத்து' ஒரே நாள் இரவில் நடப்பது இல்லை. இது பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி இறுதியில் கணவன் - மனைவி இடையே பேச்சு என்ற நிலை இல்லாததை உருவாக்கி விடும்.
ஆனால் உண்மையில் இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். இதற்கு முதலில் தைரியம் வேண்டும். நம் கணவர் தானே, நம் மனைவி தானே என்ற அன்பு வேண்டும். தீர்ப்படாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. பேசி தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கை வேண்டும். கணவன் - மனைவி இருவரில் யாராவது ஏமாற்றி இருந்தால் அதுபற்றி வெளிப்படையாக பேசுங்கள். தவறு செய்திருந்தால் அதனை இனி செய்யமாட்டேன் என்று உறுதி மொழி அளியுங்கள். வேலை செய்யும் நிறுவனங்களில் யார் யாருக்கோ பணிந்து செல்கிறோம். நம் மனைவி, நம் கணவனிடம் ஒருமுறை இறங்கி சென்று மனம்விட்டு பேசுவதில் தவறு இல்லை. இதில் தம்பதிகள் ஹேப்பியாவதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலமாக அமையும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications