வருமான வரி நிலுவை மட்டும் இத்தனை கோடியா? சரத்குமார், ராதிகா சொத்து மதிப்பை பார்த்தால் ஷாக்.. அம்மாடி
சென்னை: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளனர். அதேபோல் அவரின் கணவர் சரத்குமாரின் சொத்து விவகாரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றன. வேட்புமனு தாக்கல் காரணமாக அவர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி ராதிகா சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:
அசையும் சொத்து மதிப்புகள்: 27 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 26 கோடி ரூபாய்
அதன்படி சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:
அசையும் சொத்து மதிப்புகள்: 8 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 21 கோடி ரூபாய்
ராதிகா சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 6 கோடி ரூபாய்
இதில் வருமான வரி நிலுவை மட்டும் 3.9 கோடி ரூபாய்
ஜிஎஸ்டி நிலுவை 2.6 கோடி ரூபாய்
சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 8 கோடி ரூபாய்
இதில் வருமான வரி நிலுவை மட்டும் 3.8 கோடி ரூபாய்
ஜிஎஸ்டி நிலுவை 4.4 கோடி ரூபாய்
ராதிகா சரத்குமாருக்கு உள்ள கடன் 14 கோடி ரூபாய்
சரத் குமாருக்கு உள்ள கடன் 19 கோடி ரூபாய்
பாஜகவில் இணைந்த சமக: 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைந்துள்ளார் சரத் குமார். அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பாஜக உடன் கூட்டணி என்று சரத்குமார் அறிவித்த நிலையில், இப்போது கட்சியையே பாஜகவில் இணைத்துள்ளார்.
சரத் குமார் பேச்சு: மனைவியிடம் கேட்டு கட்சியை இணைத்தேன் என்று சரத்குமார் பேசி உள்ளார் . அதில், நள்ளிரவு 2 மணி இருக்கும்... அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர் "நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன், என்று கூறி உள்ளார்.
இந்த நிலையில்தான் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications