Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுங்கச்சாவடிகளில் 3000 பாஸ் vs 340 பாஸ்.. என்ன வித்தியாசம்.. வாகன ஓட்டிகள் அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த ரூ.3 ஆயிரத்துக்கு வருடாந்திர 'பாஸ்' திட்டம் வரும் ஆகஸ்டு 15-ந் தேதி அறிமுகம் ஆகிறது என மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் 340 ரூபாயில் மாதாந்திர பாஸ் திட்டம் உள்ளது. இந்த திட்டப்படி குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் மட்டும் மாதம் 340 ரூபாய் கட்டி பாஸ் எடுக்க முடியும். ஆனால் புதிய திட்டப்படி ஆண்டு முழுவதும் சுங்கச்சாவடிகளில் 200 முறை பயன்படுத்த முடியும்.

இந்தியா முழுவதுமே நான்கு வழிச்சாலைகளில் கார்கள் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லா முக்கிய ஊர்கள் வரும் முன்பும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வசூலிக்கப்படுகிறது.

What is the difference between a 3000 rupee pass and a 340 pass at toll booths need to know

பாஸ்டேக்

அதேநேரம் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, 'பாஸ்டேக்' முறை அமலில் இருக்கிறது. வாகனங்களில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். அவர்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, மின்னணு முறையில் சுங்க கட்டணம் கழிக்கப்படுகிறது. அதேநேரம் சுங்கக்கட்டணம் என்பது கார்கள் வைத்துள்ளவர்களுக்கு பெரிய தொல்லையாக இருக்கிறது.

சேலம், மதுரை

திருச்சி, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வாழும் மக்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் நகரின் எந்த பக்கமும் செல்ல முடியாத நிலையில் இருந்தார்கள். ஏனெனில் 60 கி.மீ. தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்துவது தொடர்பாக கார், ஜீப், வேன் போன்ற வணிகம் அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகன ஓட்டிகள் கவலையில் இருந்தார்கள்.

3000 பாஸ்டேக் குறித்து நிதின் கட்கரி

அதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், 'பாஸ்டேக்' அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறுகையில், "ரூ.3 ஆயிரத்துக்கு 'பாஸ்டேக்' அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ், ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனிநபர் வாகனங்கள்

வணிகம் அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள், இந்த பாஸை பெற்றுக்கொள்ளலாம். 'ஆக்டிவேட்' செய்த தேதியில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது 200 முறை பயணம் செய்வதற்கோ, எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பாஸை பயன்படுத்தி, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையின்றி, குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.

ராஜ்மார்க் யாத்ரா ஆப்

இதை 'ஆக்டிவேட்' செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியிலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விரைவில் 'லிங்க்' வெளியிடப்பட உள்ளது. அதேநேரம் இந்த 3000 ரூபாய் பாஸ் திட்டம் மூலம் 60 கி.மீ. தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்துவது தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு ஒரே, மலிவுவிலை பரிமாற்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. வருடாந்திர பாஸ் முறை காரணமாக, காத்திருப்பு நேரம் குறையும். நெரிசல் குறையும். சுங்கச்சாவடிகளில் தகராறு குறையும். லட்சக்கணக்கான தனிநபர் பயன்பாட்டு வாகன உரிமையாளர்களுக்கு விரைவான, சுமூகமான பயண அனுபவத்தை அளிக்கும்" என்று கூறியிருந்தார்

யாருக்கு நல்லது

இந்த திட்டப்படி, இந்தியாவில் 200 சுங்கச்சாவடிகளை கடக்க பயன்படுத்த முடியும். இதன் மூலம் சேலம், பெங்களூர், சென்னை, மதுரை, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு போன்ற சுங்கச்சாவடிகள் நிறைந்த நகரங்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.

உள்ளூர் பாஸ்

அதேநேரம் சுங்கச்சாவடி அமைந்துள்ள மக்களுக்காக உள்ளூர் வாகனத்திற்கான பாஸ் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஏற்கனவே இருக்கிறது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பதிவெண் கொண்ட வாகனங்கள் உள்ளூர் வாகனங்களாக கருதப்படும். அந்த வாகனங்களுக்கு மற்ற வாகனங்களை விட கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

பாதி கட்டணம்

உதாரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கார் ஜீப் வேன் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் 70 ரூபாய் என்றால், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு வெறும் 35 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் பேருந்துகளுக்கு 240 என்றால், உள்ளூர் பேருந்துகளுக்கு 120 தான் கட்டணம் ஆகும். அதாவது வழக்கமான கட்டணத்தை விட பாதி கட்டணம் தான் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல் உள்ளூர் வாகனங்கள் செல்ல மாதாந்திர பாஸ் திட்டமும் இருக்கிறது.

340 ரூபாய் மாதாந்திர பாஸ்

இதன்படி சுங்கச்சாவடி அமைந்துள்ள மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட வாகனங்கள் வெறும் 340 ரூபாய்க்கு மாதாந்திர பாஸ் பெற்று பயணிக்க முடியும். இதன்படி எத்தனை முறை வேண்டும் என்றாலும் பயணிக்கும் வகையில் மாதாந்திர பாஸ் கிடைக்கும். இந்த மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய் ஆகும். இந்த சலுகை பெற விரும்புபவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், இந்த வாகனம் உங்களுக்கானது என்பதற்கான சான்றிதழ், டோல்பிளாசா அமைந்துள்ள மாவட்டத்திற்கு ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனம் என்பதற்கான ஆர்சி புகல் நகல், உள்ளிட்டவற்றுடன், எல்ஆர்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் ஊர் அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் அளித்து பாஸ் பெற முடியும். இந்த திட்டப்படி ஒரு குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்கு மட்டுமே பாஸ் கிடைக்கும். மாவட்டம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பயணிக்க முடியாது. அப்படி வேண்டும் என்றால், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தனித்தனியாக பாஸ் எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+