மோடி பேச்சு மொத்தமா மாறிப்போச்சே.. 2014 செங்கோட்டை பேச்சுக்கும் 2023க்கும் நிறைய பல்டி! இதோ ஒப்பீடு
சென்னை: பிரதமர் மோடி முதன் முதலாக 2014ல் சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி பேசிய பேச்சுக்கும், 2023ல் பேசிய பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. 2014ல் ஊழல், வெளிநாட்டு கொள்கை, பொருளாதார கொள்கை குறித்தும் இந்தியாவை ஆட்சி செய்த முந்தைய தலைவர்கள் பற்றியும் அவர் பேசிய பேச்சு தற்போது முற்றிலுமாக மாறியுள்ளதோடு பிரதமர் மோடி ‛பல்டி' அடிக்கிறாரா? என கேட்கும் அளவுக்கு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த முதல் அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி மக்களுக்கு உரையாற்றுவார்கள். அப்போது தங்களின் அரசு செயல்படுத்திய திட்டங்களையும், மேற்கொள்ள உள்ள திட்டங்களையும் எடுத்துரைப்பார்கள்.

இந்த சுதந்திர தின விழாவின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமராக இருப்பவர்கள் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி பிரதமர் மோடி தற்போது தேசியக்கொடி ஏற்றி வருகிறார். 2014ல் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் ஆகஸ்ட் 15ல் அவர் செங்கோட்டையில் முதல் முதலாக தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். அதன்படி இந்த முறையும் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
இந்நிலையில் தான் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி முதல் முதலாக சுதந்திர தினத்துக்கு கொடியேற்றி வைத்தபோது பேசியதற்கும், 2023ல் இப்போது பேசியதற்கு ஏராளமான வித்தியாசம் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஊழல், வெளியுறவு கொள்கை, பொருளாதார கொள்கை, இந்தியாவை ஆட்சி செய்த முந்தைய தலைவர்களின் மீதான பார்வை என அனைத்தும் வேறுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி பேச்சில் வேறுபட்ட விஷயங்களின் பட்டியல் வருமாறு:
ஊழல்: கடந்த 2014ல் பிரதமர் மோடி ஊழல் பற்றி பேசினார். அப்போது இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பேன் என உறுதியளிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் என்பது மிகப்பெரிய தடையாக உள்ளது. இதுதான் நமது முன்னேற்ற பாதையில் இருக்கும் பெரிய தடை என்றார். ஆனால் 2023ல் அவர் பேசியபோது ‛‛இந்தியாவில் ஊழல் இன்னும் ஒரு பிரச்சனையாக உள்ளது. அதனை எதிர்த்து போராடுவதில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம்'' என்றார். இதன்மூலம் 9 ஆண்டுகளாகியுள் ஊழல் இன்னும் இருப்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
வாரிசு அரசியல்: 2014 சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி நம்பிக்கையின் அடையாளமாக இந்தியாவை மாற்றுவோம். ஊழல் மற்றும் வாரிசு அரசியல் இல்லாத நிலையை உருவாக்குவோம் எனக்கூறிய பிரதமர் மோடி ஊழல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலுக்கே பழக்கப்பட்டு விட்டது என சாடியிருந்தார். ஆனால் தற்போது வரை வாரிசு அரசியல் என்பது உள்ளது.
எதிர்க்கட்சிகள்: 2014ல் பிரதமர் மோடி பேசியபோது இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார். ஆனால் 2023ல் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கான தடையாக உள்ளன. எதிர்க்கட்சிகள் நாட்டின் மீது அக்கறை காட்டவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.
உண்மையை பேசுவேன்: 2014ல் மோடி பேசியபோது ‛‛நான் உண்மையை பேசுவேன். ஊழலை சகித்து கொள்ள மாட்டேன்'' என கூறினார். ஆனால் 2023ல் பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. முக்கிய விஷயங்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் இருக்கிறார். அவர் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வகுப்புவாதம்: 2014ல் பிரதமர் மோடி, நாட்டில் ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கம் முக்கியம். இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் பாரதமாதாவின் பிள்ளைகள். அதோடு நாம் முதலில் இந்தியர்கள். அதன்பிறகு தான் பிற விஷயங்கள் வரும் என கூறினார். ஆனால் 2023ல் வகுப்புவாதம் சார்ந்து சில கருத்துகளை பேசினார். அது மதத்தின் ரீதியாக பிளவுப்படுத்தும் வகையில் உள்ளதா பார்க்கப்படுகிறது.
வெளியுறவு கொள்கை: 2014ல் வெளியுறவு கொள்கையை இன்னும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாகபிரதமர் மோடி கூறினார். மேலும் இந்தியா இனி வேடிக்கை பார்க்கும் நாடாக இருக்காது. மாறாக அனைத்து விஷயங்களிலும் முன்னிலையில் இருக்கும் என்றார். ஆனால் 2023 உரையில், ‛‛இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருக்கும். அண்டை நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நாங்கள் ஒருபோதும் செய்யமாட்டோம்'' எனக்கூறியதன் மூலம் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை மாற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் பேசியதாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி: பிரதமர் மோடி 2014ல் வளமான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியாவை உலகளாவிய பொருளாதார சக்தியாக மாற்றுவோம் என கூறினார். ஆனால் 2023ல் உலகில் வளர்ந்த பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா இருப்பதாக கூறிய பிரதமர் மோடி இன்னும் வளர்ச்சி தேவை. இன்னும் சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் 3வது இடத்துக்கு இந்தியா வளரும் என்றார். அதோடு பரவலான வகையில் நாட்டில் வறுமை இருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திரா காந்தி: அதோடு 2014ல் பிரதமர் மோடி ‛‛இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து தலைவர்களும் பாடுபட்டனர். அவர்களுக்கு இந்த நாளில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கட்சி பாகுபாடுகளை மறந்து அனைவருடன் சேர்ந்து இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்'' என்றார். ஆனால் சுதந்திர தினம் கொண்டாட்டத்துக்கு 4 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது 1966 மார்ச் 5ம் தேதி இந்திரா காந்தி மிசோராமில் இந்திய விமானப்படை மூலம் குண்டு வீசியதாக நேரடியாக அட்டாக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications