Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திராவிட மாடல்" வளர்ச்சி! ஆளுநர் தவிர்த்ததும்.. ஸ்டாலின் முன்னிறுத்துவதும் ஏன்! சாதித்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் சில பகுதிகளைத் தவிர்த்தது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. ஆளுநர் பல வார்த்தைகளைத் தவிர்த்து இருந்தார்.. குறிப்பாக "திராவிட மாடல்" என்ற வார்த்தையை அவர் தவிர்த்திருந்தார்.

நடப்பாண்டில் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால்.. அதன்படி ஆளுநர் நேற்று சட்டசபையில் உரையாற்றினார்.

இருப்பினும், அவர் அரசு தயார் செய்து கொடுத்த முழு உரையை வாசிக்கவில்லை என்று புகார் எழுந்தன. இதையடுத்து ஆளுநர் பேசியது இல்லாமல்.. அரசு கொடுத்த உரையைச் சட்டசபை அவை குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தார்.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஆளுநர் ரவி தனது உரையில் சில வார்த்தைகளைத் தவிர்த்துள்ளார். குறிப்பாக "திராவிட மாடல் வளரச்சி" என்பதை இரண்டு முறை அவர் தவிர்த்துள்ளார். ஸ்டாலின் 2021இவ் முதல்வர் பதவியை ஏற்றது முதலே திராவிட நலன்களைச் சார்ந்த திராவிட மாடல் வளர்ச்சி என்பதையே முன்னிறுத்தி வருகிறார். அதேநேரம் தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான அதிமுக பெரியளவில் திராவிடத்தை முன்னிறுத்துவதில்லை. அவர்கள் பாஜகவின் ரப்பர் ஸ்டேம்ப் போலச் செயல்படுவதாக விமர்சனங்களும் அதிகரித்துள்ளது.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதிமுக "திராவிட மாடல் வளர்ச்சிக்கு" தாங்கள்தான் காரணம் என்று கூடச் சொல்வதில்லை. இதனால் திராவிட மாடல் வளர்ச்சி என்பதே ஸ்டாலின் அரசு முன்னிறுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. ஸ்டாலின் 2021 மே மாதம் முதல்வராகப் பதவியேற்றவுடன் தனது ட்விட்டர் பயோவில் 'Belongs to Dravidian Stock' என்ற வாக்கியத்தைச் சேர்த்துக் கொண்டார். 59 ஆண்டுகளுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் இதே வாக்கியத்தைக் குறிப்பிட்டு அண்ணா ஆற்றிய உரை அதிர வைத்தது. அதே வரியைத் தான் ஸ்டாலின் இப்போது தனது கையில் எடுத்துள்ளார். முதல்வராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த போது தான், முதலில் திராவிட மாடல் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

 திராவிட மாடல் vs ஆரிய மாடல்

திராவிட மாடல் vs ஆரிய மாடல்

கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி, கோவையில் திமுக சார்பில் "திராவிட மாடல் தான் தேசிய மாடல்" என்ற தலைப்பில் பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, நேரடியாகத் திராவிட மாடலை பாஜகவுக்கு முன்னிறுத்தும் வளர்ச்சி மாடலுக்கு எதிராக பல கருத்துகளை முன்வைத்தார். பாஜகவின் ஆட்சி என்பது ஆரிய மாடல் வளர்ச்சியின் ஒரு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட அவர், அது பிற்போக்கு மற்றும் பிளவுபடுத்தும் கருத்துகளை மக்களிடையே பரப்புவதாக அவர் தெரிவித்தார்.

அகழாய்வுகள்

அகழாய்வுகள்

தமிழ்நாட்டில் நடந்த இரண்டு தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முன்பு இருந்தே மனிதர்கள் இங்குக் குடியேறியுள்ளனர்; மேலும், நாகரிகமாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இப்போது பாஜக ஆட்சியில் திராவிடம் vs ஆரியம் என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களில் நடத்தப்பட்ட கார்பன்-டேட்டிங்கை குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், இனி இந்திய வரலாற்றைத் தமிழ் நிலத்தைத் தொடக்கப் புள்ளியாக வைத்து மீண்டும் எழுத வேண்டும் என்று கூறியிருந்தார்..

 இரும்பு பயன்பாடு

இரும்பு பயன்பாடு

இந்தியாவில் இதற்கு முன்பு கிமு 1900-2000 முன்பில் இருந்து தான் இரும்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தான் இருந்தன.. ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பு பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கிமு 2172க்கு முன்பே தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியுள்ளனர். தமிழர்களின் வரலாற்றைத் துல்லியமாகக் கண்டறிய மயிலாடும்பாறை மற்றும் கீழடி ஆகிய இரு இடங்களில் புதிய அகழ்வாராய்ச்சிகளைச் செய்யவும் திமுக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இடைவெளியைக் குறைக்கிறது

இடைவெளியைக் குறைக்கிறது

கடந்த 2019ஆம் ஆண்டில், மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் முக்கியமான ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது முன்பு தமிழ் பிராமி எழுத்துக்கள் கிமு 300களில் தோன்றியது என்றே அறியப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பே கிமு 600இல் இருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டது என்பது இந்த ஆய்வில் தான் தெரிய வந்தது. இந்த கார்பன் டேட்டிங் ஆய்வு சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் சங்க காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது.

 எளிதாக கிடைக்கவில்லை

எளிதாக கிடைக்கவில்லை

இந்த டேட்டிங் ஆய்வு முடிவுகளும் கூட எளிதாகக் கிடைக்கவில்லை. முதலில் இங்கு அகழாய்வை நடத்திய மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை, காலத்தைத் துல்லியமாகக் கண்டறியும் மேம்பட்ட கார்பன்-டேட்டிங் சோதனைகளுக்குச் செல்லவில்லை. இது நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், அகழாய்வைத் தொடங்கிய தொல்லியல் துறை அதிகாரி தமிழ்நாட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு தமிழக அரசு எடுத்த முயற்சிக்கு பின்ரே இவை தெரிய வந்தன.

 அம்பேத்கர்

அம்பேத்கர்

கோவையில் திரவிடா மாடல் பயிலரங்கில் ஆ. ராசா ஆற்றிய உரையில் பல முக்கிய கருத்துகள் இடம் பெற்றிருந்தது. ​​பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை ஆரிய மாடல் வீழ்த்திவிட்டதாகவும் இருப்பினும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். அம்பேத்கர் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்த பத்தியையும் ஆளுநர் ரவி தனது பேச்சில் புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+