விஜய் சங்கியா.. சமூக நீதி வாதியா? தமிழக வெற்றி கழக கொள்கை இதான்.. க்ளூவை டீகோட் செய்வோமா?
சென்னை: நேற்று அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் கொள்கை என்ன என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில் அதை அவரே பூடகமாக தன்னுடைய அறிக்கையின் மூலமாகவும் முந்தைய பேச்சுக்கள் மூலமாகவும் தெளிவுபடுத்தி இருக்கிறார். அப்படி என்ன கொள்கை விரிவாக பார்ப்போம்.
நடிகர் விஜய் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் "தமிழக வெற்றி கழகம்" என்ற தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த பெயரில் கொள்கை ஏதும் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அதே சமயம் அவர் தன்னுடைய அறிக்கையில் இது குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார். "தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்.
அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஊழல் இல்லாத நிர்வாகம் என்பது கடமை. அதை கொள்கை என்று வரையறுக்க முடியாது. ஆனால், அந்த அறிக்கையில் மற்றொரு விசயத்தையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுதான்"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம்) என்ற சமூக நீதி பேசும் குரளை குறிப்பிட்டு உள்ளார். சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" செய்பவர்களை விமர்சித்து சாதி மத பேதமற்ற ஆட்சியை செய்வேன் என கூறியதன் மூலமாக அவரும் சமூக நீதி கொள்கையையே பிரதிபலிப்பது தெளிவாக தெரிகிறது.
முன்னதாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சினிமா துறையினர் எல்லாம் ஆதரித்தபோது விஜய் மட்டும் எதிர்த்து பேசினார். அதுமட்டுமின்றி நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டுக்கு இரவோடு இரவாக சென்றது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகத்தை மூடிக்கொண்டு பங்கேற்றது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து உதவியது என அதிகார வர்க்கத்தின் பக்கம் நிற்காமல் எளியோரின் பக்கம் நின்று இருக்கிறார்.
கடந்த ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரை படியுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் விஜய். இது போன்ற செயல்களின் மூலம் நடிகர் விஜய் சமூக நீதி கொள்கையை விரும்புபவர் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், அரசியலில் அதை அமல்படுத்துவதில் கவனம் சிதறாமல், தன்னுடைய கட்சியினருக்கும் சமூக நீதியை போதித்து தெளிவாக நடைபோடுவதை பொறுத்தே அவரது வெற்றியும் தோல்வியும் இருக்கிறது.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications