டியூடிபர் இர்ஃபானுக்கு என்ன தண்டனை? சட்டம் என்ன சொல்கிறது? ஜெ. செய்த புரட்சி!
சென்னை: சட்டப்படி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனை செய்வது குற்றம். அப்படி எனில் இர்ஃபானுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்?
தமிழ்நாட்டில் உள்ள யூடியூபர்களில் மிகப் பிரபலமானவர் இர்ஃபான். அவர் தனக்குப் பிறக்கப் போகின்ற குழந்தை ஆணா? பெண்ணா? என்று மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததுடன் இல்லாமல், அதைப் பொதுவெளியில் வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார்.

அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அதற்கான அறிவிப்புப் பலகைகள் வெட்ட வெளிச்சமாகப் போடப்பட்டுள்ளது.
அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாய்,சேய் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல்; பொது இடங்களில் கூட இதற்கான பலகைகள் வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
அப்படி இருந்தும் படித்த இளைஞர் ஒருவர் இந்த மாதிரியான காரியத்தை வீடியோ போட்டுக் கொண்டாடி இருப்பது வேதனையான செய்தி இல்லாமல் வேறு என்ன?
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது தொடர்கதையாக நடந்து வந்தது. கள்ளிப் பால் கொடுத்து குழந்தையின் உறவினர்களே இதைச் செய்து வருவது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
இதை ஒழிப்பதற்காகத்தான் 1992இல் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொட்டில் குழந்தை திட்டத்தைத் தமிழ்நாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படிப் பல வழிகளில் முன்னேறிய மாநிலத்தில் வாழும் இளைஞர் இர்ஃபான், இன்னும் அறியாமையில் சிக்கத் தவிக்கிறார் என்பது வேடிக்கையல்ல. வேதனை.
இந்நிலையில் கருக்கலைப்பு பற்றியும் அதன் விழிப்புணர்வு எப்படி உள்ளது என்பது பற்றியும் பேச முன்வந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி, "பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் வயிற்றுக்குள் உள்ள கருவின் பாலினம் என்ன? என்பதை அறிவதைச் சட்டம் தடை செய்துள்ளது.

இந்தச் சட்டத்தை மட்டுமே வைத்து குற்றங்களைத் தடுத்துவிடலாம் என ஆட்சியாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை.
Gender inequality, Global gender gap index போன்ற பகுப்பாய்வுகளில் இந்தியாவின் நிலை மிகமிக மோசமாகவே இருந்து வருகிறது. நம் நாட்டுக்குக் கீழாக உள்ள நாடுகள் எவையும் வளர்ந்த நாடுகள் அல்ல.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற சில நாடுகள் உள்ளன. அந்தளவில்தான் இந்தியாவில் பெண்களின் நிலை இருந்துவருகிறது.
என்ன காரணங்களால் பெண் குழந்தையை வேண்டாம் எனப் பெற்றோர் நினைக்கிறார்கள்? கருவிலேயே பெண் சிசுவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்? அதற்காகக் காரணங்கள் என்ன? என்பது பற்றித் தெளிவான தரவுகள் நம்மிடம் இல்லை. அதன் காரணங்களை ஆராயாமல் அதற்குத் தீர்வுகளைத் தரவே முடியாது.
வெறும் சட்டங்களால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முடியாத காரியம். ஆகவே சட்டத்தை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். காலத்திற்குப் பொருந்தாத ஷரத்துகளை நீக்குவதுடன் புதிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
பெங்களூர் போன்ற நகரங்களில் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று அறிந்து கொள்வதற்கான ரகசிய பார்டிகள் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகத்தான் இப்போது வெளிப்படையாக ஒருவர் சிக்கி இருக்கிறார்.
இவர் விளம்பர நோக்கத்திற்காகச் செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா எனக் கண்டறிய வேண்டும்" என்று தன் கருத்துகளை முன்வைத்தார்.
இந்த விவகாரம் குறித்து இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "வீடியோவை நீக்கிவிட்டோம். அரசு தரப்பிலிருந்து எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அப்படிக் கிடைத்தால் அதற்கான பதிலை உரிய முறையில் அளிப்பேன்" என்று சொல்லி இருக்கிறார்.

கருக்கலைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
கருக்கலைப்பு தடுப்புச் சட்டமானது 1994 ஆம் ஆண்டு அமலாக்கத்திற்கு வந்தது. அதன்பின்னர் பல்வேறு மாற்றங்கள் அதில் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக உச்சநீதிமன்றம் திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு அனுமதி அளித்து அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது.
கர்ப்பிணி ஒருவரின் பாதுகாப்பு காரணங்களைத் தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்களுக்காகக் கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்ய வைத்தால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் வழங்கச் சட்டம் வழிவகை செய்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது 'நல் எண்ணம்' என்ற வார்த்தைதான். அது என்ன நல் எண்ணம்? அப்படி நல்லெண்ணத்துடன் கருக்கலைப்பு செய்வது தவறில்லையா? ஆம்! தவறில்லை.
கர்ப்பிணி ஒருவர் கருவை வயிற்றில் சுமக்கும் போது, அந்தச் சிசுவின் வளர்ச்சி சரியில்லை, உடல் உறுப்புகளில் பாதிப்பு அல்லது அதனால் அந்தத் தாயின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து இருக்கும் பட்சத்தில் சட்டப்படி கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
ஆனால், இதை அனைத்து மருத்துவர்களாலும் செய்ய முடியாது. அந்தச் சிசுவின் நிலையின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்த பின் பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் ஆலோசனையின் படியே அதைச் செய்யச் சட்டம் அனுமதி தந்துள்ளது.
இதை மீறி 4 முதல் 5 மாதம் வரை உள்ள சிசுவைக் கருக்கலைப்பு செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டையைப் பெற்றுத் தரமுடியும். பிறநபர்களைத் தவிர்த்து ஒரு தாயே இந்த முடிவை எடுத்துக் கருக்கலைப்பு செய்தாலும் 7 ஆண்டுகள் தண்டனை தரமுடியும்.
இந்தியத் தண்டனைச் சட்டம் ஐபிசி 312,314 மற்றும் 315 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் இந்தத் தண்டனையானது வழங்கப்படும்.
இதில் ஐபிசி 315 பிரிவானது கருக்கலைப்பு செய்யும் போது தாயின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அந்த மருத்துவருக்கு 10 ஆண்டுகாலம் தண்டை வழங்க அனுமதியளித்துள்ளது. இது குற்றத்தின் அளவை பொறுத்து இது ஆயுள் தண்டனை அளவுக்குக்கூட வழங்கப்படலாம்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications