சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெயிட்டாக வலிமை அப்டேட் வெளியிட்ட தல.. பர்ஸ்ட் சிங்கிளில் வாழு வாழ விடு வரி.. பின்புலத்தில் அரசியலா?

Google Oneindia Tamil News

சென்னை: வாழு வாழ விடு என்ற வாசகத்தை தனது வலிமை பட பாடல் மூலம் நடிகர் அஜித் பயன்படுத்தியதன் பின்புலத்தில் அரசியல் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடலை அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 60 ஆவது படம்தான் இந்த வலிமை.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லைதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

பொதுவாக அஜித் அரசியல் பின்புலம் கொண்ட கதைகளில் நடிக்க மாட்டார் என்பதால் அவரது படம் குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் எப்போதும் எழும். அந்த வகையில் 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் இந்த வலிமை படம் குறித்து டைட்டில் நடிகர்கள், தயாரிப்பாளர், இயக்குநர் , இசை உள்ளிட்ட விவரங்கள் வெளியானதுடன் அவ்வளவுதான்.

வலிமை அப்டேட்

வலிமை அப்டேட்

அதன் பின்னர் தல ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதாவது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் செய்த சேட்டை எல்லையை மீறிச் சென்றது. சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த போது அவரை வரவேற்க வைத்திருந்த பதாகையில் அஜித் ரசிகர்கள் சிலர் அதன் பின்புறம் வலிமை அப்டேட் என எழுதி வைத்து பிரதமர் தங்களை கடக்கும் போது வலிமை அப்டேட் சொல்லுங்கள் ஐயா என கேட்டு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினார்கள்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

இதையடுத்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பவுண்டரி லைனிங் நின்று கொண்டு பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்டிருந்தனர். ஆனால் அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடமும் கேட்டுள்ளனர். இதையடுத்து அவருக்கு எதுவும் புரியாமல் வலிமை என்றால் என்ன என அஸ்வினிடம் கேட்டாராம். பின்னர் பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசனிடமும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர்.

கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் வீரர்கள்

இப்படி பிரதமர், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் வலிமை அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் அஜித்தோ "வலிமை படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காக்குமாறு" வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அதில் "நாங்க வேற மாரி" என தொடங்கும் இந்த பாடலில் அஜித் பார்ப்பதற்கு இளமை தோற்றத்தில் உள்ளார். இதில் நிறைய பாசிட்டிவ் வரிகள் உள்ளன. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

பாடல் வரிகள்

பாடல் வரிகள்

இந்த பாடலில் "உன் வீட்ட மொத பாரு, அது தானாவே சரியாகும் உன் ஊரு, கருத்து சொல்ல நான் ஞானி இல்ல, ஆனா எடுத்து சொல்ல தப்பும் இல்ல, நாளைக்கு நிம்மதியா நீ இருக்க, இன்னிக்கு இறங்கி செதுக்கிடனும் உன் எண்ணத்த அழகா நீ அமைச்சிகிட்டா, எல்லாமே அழகாகும் சரியாகும், வாழு வாழ விடு அவ்வளோதான் தத்துவம்.... என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் வரும் "வாழு வாழ விடு" என்ற வரி ஏற்கெனவே அஜித் தனது லெட்டர் பேடில் பயன்படுத்தியதுதான்.

தமிழிசை சவுந்திரராஜன்

தமிழிசை சவுந்திரராஜன்

ஆம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பூரில் அப்போதைய பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். அப்போது தமிழிசை பேசுகையில் திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

அஜித் அறிக்கை

அஜித் அறிக்கை

இதற்கு நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் என்‌ மீதோ, என்‌ ரசிகர்கள்‌ மீதோ, என்‌ ரசிகர்‌ இயக்கங்களின்‌ மீதோ எந்த விதமான அரசியல்‌ சாயமும்‌ வந்து விடக்கூடாது என்று நான்‌ சிந்தித்ததின்‌ சீரிய முடிவு அது. என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல்‌ நிகழ்வுகளுடன்‌ என்‌ பெயரையோ, என்‌ ரசிகர்கள்‌ பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள்‌ வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல்‌ வரும்‌ இந்த நேரத்தில்‌ இத்தகைய செய்திகள்‌ எனக்கு அரசியல்‌ ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொதுமக்கள்‌ இடையே விதைக்கும்‌.

மறைமுகமாக அரசியல்

மறைமுகமாக அரசியல்

இந்த தருணத்தில்‌ நான்‌ அனைவருக்கும்‌ தெரிவிக்க விழைவது என்னவென்றால்‌ எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில்‌ நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்‌கட்ட அரசியல்‌ தொடர்ப்பு. நான்‌ என்‌ ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்‌ என்றோ வாக்களியுங்கள்‌ என்றோ எப்பொழுதும்‌ நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும்‌ மாட்டேன்‌ என நீளமான அறிக்கையை வெளியிட்ட அவர் கடைசியாக வாழு வாழ விடு என கூறியிருந்தார்.

அஜித்தின் கருத்து கத்தி

அஜித்தின் கருத்து கத்தி

இந்த வார்த்தை பாஜகவுக்கு எதிராக அஜித்தின் கருத்து கத்தி என பலர் விவாதித்தனர். 2019இல் பயன்படுத்தியதோடு சரி அதன் பின்னர் அஜித் எந்த சூழலிலும் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. தனது வலிமை படத்தில் ‛வாழு வாழ விடு'என்கிற வரியை பாடுகிறார். அதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஒரு வேளை விஜய் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து தனது படங்களில் வசனங்களை வைத்து வருகிறார். அது போல் வாக்களிக்க அவர் சைக்கிளில் வந்ததும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து என கூறப்பட்டது. ஆனால் இதை விஜய் தரப்பு மறுத்தது. இதனால் அஜித்தின் ஆதரவை பாஜக விரும்புவதாகவுஇந்த வார்த்தை பாஜகவுக்கு எதிராக அஜித்தின் கருத்து கத்தி என பலர் விவாதித்தனர். 2019இல் பயன்படுத்தியதோடு சரி அதன் பின்னர் அஜித் எந்த சூழலிலும் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. தனது வலிமை படத்தில் ‛வாழு வாழ விடு'என்கிற வரியை பாடுகிறார். அதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஒரு வேளை விஜய் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து தனது படங்களில் வசனங்களை வைத்து வருகிறார். அது போல் வாக்களிக்க அவர் சைக்கிளில் வந்ததும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து என கூறப்பட்டது. ஆனால் இதை விஜய் தரப்பு மறுத்தது. இதனால் அஜித்தின் ஆதரவை பாஜக விரும்புவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்த ஏதேனும் அறிக்கை மூலம் வாழு வாழ விடு என்றால் அது வைரலாகி அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது போல் பாடலில் கூறியுள்ளாரா அஜித்? இல்லை கதையின் கருவுக்கு ஏற்ப இந்த பாடல் வரிகள் அமைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. எனவே படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். ம் ஒரு கருத்து நிலவுகிறது. தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்த ஏதேனும் அறிக்கை மூலம் வாழு வாழ விடு என்றால் அது வைரலாகி அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது போல் பாடலில் கூறியுள்ளாரா அஜித்? இல்லை கதையின் கருவுக்கு ஏற்ப இந்த பாடல் வரிகள் அமைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. எனவே படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Ajith's Valimai Song lyric Vaazhu Vazha vidu (Live let live) says any political message?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X