இந்த பெயரை வைங்க.. ஸ்டாலினுக்கு பறந்த ஆலோசனை.. ஆனா "அம்மா" இருக்கே.. கணக்கு போடும் அறிவாலயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்த திட்டம் ஒன்றிற்கு பெயர் தேர்வு செய்வது தொடர்பாக ஆளும் தரப்பில் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறதாம்.

Recommended Video

    சமூக நோய்களை குணப்படுத்தும் காரமான திராவிட மாடல் அரசு - MK Stalin

    தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு 1 வருடம் ஆகிறது. திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இதை முன்னிட்டு இன்று திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்த உள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடக்க உள்ளது.

    சட்டசபை

    சட்டசபை

    இன்று 1 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் வெளியிட்டார். 5 முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவித்தார். Skills of excellence டெல்லியில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் "தகைசால் பள்ளி" யாக மேம்படுத்தப்படும்.
    21 மாநகராட்சிகள்,61 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

     அறிவிப்புகள்

    அறிவிப்புகள்

    இதில் முக்கியமான அறிவிப்பு என்றால், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும்,படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் கொண்டு செல்லப்படும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதுதான். இந்த இரண்டு அறிவிப்புகளும் அதிக கவனம் பெற்றுள்ளன. இந்தியாவிற்கே தமிழ்நாட்டின் மதிய உணவு திட்டம்தான் முன்னோடியாக இருந்தது.

    திமுக ஸ்டாலின்

    திமுக ஸ்டாலின்

    இந்த நிலையில் தற்போது காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னைக்கு மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது இந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற விவாதம் ஆளும் தரப்பில் எழுந்து உள்ளதாம்.

     மதிய உணவு திட்டம்

    மதிய உணவு திட்டம்

    ஏனென்றால் முன்னதாக மதிய உணவு திட்டத்தை சீர் படுத்திய பின் அதற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது. எம்ஜிஆர் மதிய உணவு திட்டம் என்று இது அழைக்கப்பட்டது. அதேபோல் மலிவு விலை உணவகம் என்று கொண்டு வரப்பட்ட போது அதற்கு அம்மா உணவகம் என்று ஜெயலலிதா ஆட்சியில் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் திமுகவில் எழுந்து உள்ளதாம். இந்த காலை சிற்றுண்டி திட்டம் என்பது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வைத்த வேண்டுகோளின் படி கொண்டு வரப்பட்டது ஆகும்.

    காலைச்சிற்றுண்டி திட்டம்

    காலைச்சிற்றுண்டி திட்டம்

    இதனால் இந்த திட்டத்திற்கு டாக்டர். கலைஞர் காலைச்சிற்றுண்டி திட்டம் என பெயர் சூட்டிடவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு இது தொடர்பாக அந்த சங்கம் ஆலோசனை வழங்கி உள்ளது. ஆனால் அதே சமயம்.. ஏற்கனவே சில திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் இருக்கிறது. சமீபத்தில் கூட ஈசிஆர் சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.

    ஸ்டாலின் பெயர்

    ஸ்டாலின் பெயர்

    அதனால் இதற்கு முதல்வர் ஸ்டாலின் பெயர் கொண்டு வரலாம். எதிர்காலத்தில் இந்த திட்டம் பெரிதாக பேசப்படும். இப்போதே ஸ்டாலின் பெயர் வைத்தால் அம்மா உணவகம் இருக்கிறதே.. அது போல நிலைத்து நிற்கும். மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் பற்றி பேசும் போது ஸ்டாலின் சிற்றுண்டி என்று பேசப்படும். அதனால் அப்படியே வைக்கலாம் என்றும் அறிவாலயத்தில் சில தலைகள் ஆலோசனை வழங்கி உள்ளனராம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+