செந்தில் பாலாஜி.. பொன்முடி.. அனிதா.. "பேட்டர்னை" கவனிச்சீங்களா? திமுகவிற்கு காத்திருக்கும் சிக்கல்!
சென்னை: அமைச்சர்கள் செந்தில் பாலாஜி.. பொன்முடி.. அனிதா ராதாகிருஷ்ணன் என்று வரிசையாக முக்கிய அமைச்சர்கள் குறி வைக்கப்படுவதற்கு பின் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதாக ஆளும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. அதிலும் இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திடீரென அமலாக்கத்துறை ரெய்டுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

முக்கியமாக பிரதமர் மோடி திமுகவை நேரடியாக, கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளார். அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் இன்று கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
அதில், எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன.
அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை, என்று திமுகவை தாக்கி பேசி உள்ளார். அந்தமானில் தாக்கி பேசிய அவர் சமீபத்தில்தான் போபாலிலும் திமுகவை தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெய்டு: இந்த நிலையில்தான் திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து ரெய்டுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் நேற்று முதல்நாள் அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி இருவரும் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார். நேற்று முதல்நாள்
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின் அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த டார்கெட்: இன்னொரு பக்கம் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கீழ் வந்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்று அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடக்கியது.
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அமலாக்கத்துறை இடைக்கால தடை நீக்கப்பட்டதும் விசாரணையை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் தற்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடக்கும் வழக்கில் அமலாக்கத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் எங்களுக்கு உதவ வேண்டும் . அவர்களுடன் இணைந்து நாங்கள் விசாரணை நடத்த விரும்புகிறோம் என்று தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
ஒற்றுமை: அமைச்சர்கள் செந்தில் பாலாஜி.. பொன்முடி.. அனிதா ராதாகிருஷ்ணன் என்று வரிசையாக முக்கிய அமைச்சர்கள் குறி வைக்கப்படுவதற்கு பின் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதாக ஆளும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மூன்று பேருமே பொருளாதார ரீதியாக பணக்காரர்கள். இதில் பொன்முடி.. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசியல் தாண்டி பிஸ்னஸ் செய்ய கூடியவர்கள்.
தேர்தலில் செலவு செய்ய நிறைய பண பலம் கொண்டவர்கள். இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி கொங்கில் சிறப்பாக அரசியல் செய்ய கூடியவர். இதனால் திமுகவை தேர்தலில் முடங்கும் விதமாக, தேர்தலில் செலவு செய்ய ஆற்றல் கொண்ட, பண பலம் வாய்ந்த அமைச்சர்கள் குறி வைக்கப்படுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் இவர்களை முடக்கும் விதமாக குறி வைக்கப்பட்டு உள்ளனரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications