பெரிய ரிஸ்க்! சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் முன் உள்ள அந்த சவால்! தரையிறக்குவது ஏன் சேலஞ்ச் தெரியுமா?
சென்னை: நிலவின் தென் துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான் 2, ரஷ்யாவின் லூனா 25 ஆகிய விண்கலன்கள் சரியாக தரையிறங்க முடியாமல் தோல்வியடைந்த நிலையில், இந்த தோல்விக்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
நிலவு குறித்த கற்பனைகள் மனிதனுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டது. கற்காலத்தில் குகைகளில் வசித்தபோது நிலவு, நட்சத்திரங்கள் குறித்து மனிதன் வரைந்து வைத்திருந்தான். இந்த ஆர்வத்திற்கு வடிவம் கொடுக்க நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. பின்னர் ஒருவழியாக 1959ம் ஆண்டு நிலவுக்கு விண்கலனை அனுப்பி ஆய்வு செய்தோம். அதன் பின்னர் மனிதர்களாகிய நாமும் நிலவுக்கு சென்று திரும்பினோம்.

எல்லாம் சரி ஆனால் தற்போது நிலவுக்கு சென்ற சந்திரயான் 2, லூனா 25 திட்டங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து தோல்வியில் முடிந்துள்ளது என்கிற கேள்வி மேலெழுந்திருக்கிறது. இதற்கு காரணம் இந்த இரண்டு விண்கலன்களும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயன்றதுதான் என விளக்கமளித்துள்ளனர். தென் துருவத்தில் தரையிறங்குவது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா? என்று கேட்க தோன்றலாம். ஆனால் அதற்கு முன்னர் இந்த பகுதியில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மனிதன் முதன் முதலில் 1969ம் ஆண்டு நிலவில் தரையிறங்கினான். அப்போது இருந்த பாதுகாப்பு அம்சங்கள், தொலை தொடர்பு வசதிகளை விட தற்போது அனைத்து டெக்னாலஜியும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கம்ப்யூட்டர்களின் வளர்ச்சி மிக பிரமாண்டமாக இருக்கிறது. ஆனாலும் ஏன் நம்மால் நிலவின் தென் துருவத்தில் ஒரு ரோவரை கூட வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை? இதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
"நம்முடைய கம்ப்யூட்டர் டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், நிலவில் தரையிறங்க ராக்கெட் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். 1960ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மனிதர்கள் தயாரித்த ராக்கெட்களின் டெக்னாலஜி வெறும் 10-20 சதவிகிதம் வரைதான் வளர்ச்சி கண்டிருக்கிறது. இதுதான் நிலவில் தரையிறங்குவதில் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல். ராக்கெட்களை மார்டனாக மாற்றி பரிசோதிக்க ஏராளமான பணம் செலவாகிறது.
மறுபுறம் நிலவில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. என்னதான் நிலவில் மனிதர்கள் கால் பதித்திருந்தாலும், தற்போதுவரை நிலவின் தென் துருவத்தை பற்றி நமக்கு முழுமையாக தெரியாது. ஒரு சில விஷயங்கள் மட்டுமே தெரியும். இப்படி விஷயம் தெரிந்த இடங்களில்தான் நாம் ரோவரை தரையிறக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் ஆய்வுப்படி 1 கி.மீ தொடங்கி 8 கி.மீ வரை விட்டம் கொண்ட 1.40 லட்சம் பள்ளங்கள் நிலவில் இருக்கின்றன. இந்த பள்ளங்கள் நம்ப முடியாத அளவு செங்குத்தானவை.
இதில் கற்கள், பாறைகள் ஆகியவையும் இருக்கின்றன. எனவே இங்கு விண்கலன்கள் தரையிறங்க வேண்டிய இடத்தை தீர்மானிப்பதிலேயே பிரச்னை எழுகிறது. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் 'போகஸ்லாவ்ஸ்கி' எனும் 95 கி.மீ விட்டம் கொண்ட தென் துருவ பள்ளத்தாக்கில் தரையிறங்க புரோகிராம் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் திட்டமிட்டபடி இறங்க முடியவில்லை. இந்த பள்ளம் பல இடங்களில் 5-10 டிகிரி சரிவாக இருக்கிறது. சில இடங்களில் 45 டிகிரி வரையும் சரிந்து இருக்கிறது.
மட்டுமல்லாது இந்த பள்ளத்தில் 4 சதுர கி.மீ வரை ஆய்வு செய்ததில் 0.5 மீட்டர் முதல் 13 மீட்டர் அளவு வரை 16,000க்கும் அதிகமான கற்பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதெல்லாம் கடந்த 2014ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டாகிவிட்டது. இவ்வளவு டேட்டாக்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் நம்மிடம் இருந்தும் கூட நிலவின் தென் துருவத்தில் சரியாக விண்கலத்தை லேண்ட் செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்த தென் பகுதியில் நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையில் சந்திரயான் 3 லேண்டரை தரையிறக்குவது கூட சவாலான பணிதான்" என்று கூறியுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications