Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டன் டூ சென்னை.. ரூ. 400 கோடி சொத்து.. சங்கீதாவின் 'சைலண்ட்' சாம்ராஜ்யம்? எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: தவெக தலைவர் விஜய்யின் நிழலாக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரிதாக பொதுவெளியில் தலைகாட்டாமல் ஒரு 'மிஸ்டரி'யாகவே இருந்து வந்தவர் சங்கீதா. தற்போது அவர் விவாகரத்து கோரி நீதிமன்றம் படி ஏறியிருக்கும் நிலையில், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. குறிப்பாக, "கல்யாணத்துக்கு முன்னாடியே சங்கீதா பெரிய கோடீஸ்வர குடும்பமாமே?" என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.

யார் இந்த சங்கீதா?

இலங்கைத் தமிழரான சங்கீதா, லண்டனில் செட்டில் ஆன ஒரு பெரும் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய பிசினஸ் மேக்னட். சங்கீதா பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே லண்டனில்தான். 1996-ல் 'பூவே உனக்காக' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யைப் பாராட்டுவதற்காக லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து நேரில் சந்தித்ததுதான் இவர்களது காதலுக்கான முதல் புள்ளி.

சொத்து மதிப்பு: உண்மையா? ஊகமா?

சங்கீதா குறித்துப் பரவி வரும் தகவல்களின்படி, அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இது விஜய் சினிமாவில் சம்பாதித்த சொத்து அல்ல; மாறாக, சங்கீதா தந்தை சொர்ணலிங்கத்திடமிருந்து அவருக்குக் கிடைத்த பரம்பரைச் சொத்து மற்றும் லண்டனில் உள்ள தொழில் முதலீடுகள் மூலம் வந்த வருமானம் என்று கூறப்படுகிறது.

சங்கீதாவின் சொத்து பின்னணி சில துளிகள்:

லண்டன் பிசினஸ்: லண்டனில் உள்ள தனது தந்தையின் தொழில்களைச் சங்கீதா கவனித்து வருவதாகவும், அங்கேயே அவருக்குக் குறிப்பிடத்தக்க அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரச் சுதந்திரம்: திருமணத்திற்கு முன்பே அவர் ஒரு கோடீஸ்வர வாரிசாக இருந்ததால், விஜய்யைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை.

ஜீவனாம்சம் சர்ச்சை: தற்போது விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய்யின் 600 கோடி ரூபாய் சொத்தில் 50% பங்கைக் கேட்கிறாரா என்ற விவாதங்கள் எழுந்தன. ஆனால், சங்கீதாவே 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதி என்பதால், அவர் பொருளாதார ரீதியாக மிகவும் சுதந்திரமானவர் என்றே உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகள், மகனுக்கு விஜய் செய்ய வேண்டும் என்பதற்காக ஜீவனாம்சம் கேட்டுள்ளார்.

What is the real asset value of Vijay estranged wife Sangeetha in London

மவுனமே ஆயுதம்!

இவ்வளவு பெரிய சொத்துக்கள், அதிகாரப் பின்னணி இருந்தும், லண்டன் யுனிவர்சிட்டியில் படித்திருந்தும், சங்கீதா ஒரு 'ஹோம் மேக்கராக'வே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். தனது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர், தற்போது சட்டப் போராட்டத்தில் இறங்கியிருப்பது கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சங்கீதா மனுவில் சொல்லி இருப்பது என்ன?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சங்கீத தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணம் கடந்த உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக கூறிய விஜய் திருந்தவே இல்லை. 2021ல் தொடங்கி என்னை தனியாக வாழுமாறு நிர்பந்தித்தார்.

விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த' நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.

என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன், என்று சங்கீதா மனுவில் கூறி உள்ளார்.

லண்டனில் தனது குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொண்டு, மீடியா வெளிச்சம் படாமல் இருக்கும் சங்கீதாவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+