Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பத்தில் இருந்து விடாத சிக்கல்.. விஜயின் லியோ படத்திற்கு என்னதான் பிரச்சனை? நடந்தது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லியோ படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்துள்ளது. நாளை வெளியாகும் இந்த படம் இந்த நொடி வரை கூட பிரச்சனை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன், மிஷகின், சஞ்சய் தத், நடிப்பில், அனிரூத் இயக்கத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. நாளை படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் கடந்து வந்த பிரச்சனைகள், சந்தித்த சர்ச்சைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

திரிஷா போனார்?: படம் ஆரம்பித்த சில நாட்களிலேயே படத்தில் இருந்து திரிஷா வெளியாகிவிட்டதாக செய்திகள் வந்தன. திரிஷாவிற்கு இருக்கும் காட்சிகளை அவர் விரும்பவில்லை. அதனால் அதில் இருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் கடைசியில் அது உண்மை இல்லை பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

What is the real problem behind the Vijay Movie Leo release? All you need to know

லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை: அதன்பின் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. படத்தின் கதையில் விஜய்க்கு விருப்பம் இல்லை. அதனால் அவர் மாற்றங்களை சொன்னார். இதை லோகேஷ் கனகராஜ் ஏற்கவில்லை. அதனால் அவர் வெளியேறி இயக்குனர் ரத்னகுமார்தான் படத்தை இயக்கினார் என்று செய்திகள் வந்தன. கடைசியில் அதுவும் பொய் என்று ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இருவரும் மறுப்பு வெளியிட்டனர்.

ஆடியோ லான்ச் கேன்சல்; அதன்பின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. விழாவிற்கு மேடை எல்லாம் போட்டு டிக்கெட் விற்கப்பட்ட பின் விழா ரத்தானது. நேரு அரங்கில் நடக்க இருந்த விழா அதிக டிக்கெட் விற்பனை, போலி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதே சமயம் அவரின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அரசியல் ரீதியாகவே அனுமதி கொடுக்கவில்லை. திமுக அரசுதான் இதை செய்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறினர். இதற்காக #DMKFearsThalapathyVIJAY என்ற டேக்கையும் டிரெண்ட் செய்தனர். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 30-ந்தேதி நடக்கவிருந்தது. அந்த நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் நேற்று நடக்கவில்லை.

What is the real problem behind the Vijay Movie Leo release? All you need to know

இந்த சம்பவம் விஜய் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்தது. திமுகவின் மிரட்டல் அரசியல்தான் காரணம் என சோசியல் மீடியாக்களிடம் கொந்தளித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கு முன்பு, நடிகர் விஜய்யை சந்தித்த தயாரிப்பாளர், காவல்துறை தரப்பிலிருந்து பாதுகாப்பு தனக்கு கொடுக்கப்படும் அழுத் தத்தை விவரித்து, நான் முடிவு எடுக்கலாம் என்று கேட்டிருக்கிறார். விஜயும் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு ஒப்புக்கொண்ட பின்பே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரோகினி சீட் உடைப்பு: இதையடுத்து படத்தின் ட்ரைலர் வெளியானது. அப்போது சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் செய்த அடவாடியில் தியேட்டரின் எல்லா சீட்டுகளும் அடித்து உடைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது.

கெட்ட வார்த்தை: அதேபோல் லியோ ட்ரைலரில் விஜய் இடையில் கெட்ட வார்த்தை ஒன்றை பேசி இருந்தார்.கோபத்தில் பெண்களை இகழும் விதமாக கெட்டவார்த்தை ஒன்றை பேசி இருந்தார். இது படத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

What is the real problem behind the Vijay Movie Leo release? All you need to know

காலை காட்சி சிக்கல்: இது போக லியோ' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிடலாம், காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்' என கூறியது. காலை 4 மணி காட்சிக்கு, 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் கூறியது. சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர வழக்கு தொடரப்பட்டது. லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்றது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , 19ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.காலை 9 மணிமுதல் இரவு 1.30 வரை தொடர்ந்து ஐந்து காட்சிகளை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்புவது சிரமம் என தெரிவித்தார்.

What is the real problem behind the Vijay Movie Leo release? All you need to know

அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன .ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னைக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என குறிப்பிட்டார்.

இதையடுத்து அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டதா? அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டு வழக்கை நேற்று ஒத்திவைத்திருந்தனர், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் பொது நல வழக்கு என்பது ஹீரோ கலாச்சாரம் பற்றியது என தெரிவித்தார். விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் வாதிட்டார்,

மேலும் காலை நான்கு மணிக்கு ரசிகர் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய நடிகரின் படம் என்றும் தெரிவித்தார். அப்போது குறிப்பிட்ட நீதிபதி அனைத்து காட்சிகளும் ரசிகர்கள் காட்சிதானே என நகைச்சுவையோடு குறிப்பிட்டார். தொடர்ந்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏற்கனவே 5 காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது , சினிமாவின் கால அவகாசம் குறித்து அவர்கள் குறிப்பிடவில்லை, விதிகளை மீற முடியாது என தெரிவித்தனர்.

வழக்கு அதிரடி உத்தரவு: அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏன் ஏழு மணிக்கு அனுமதிக்க கூடாது ? இன்ட்ர்வல் நேரத்தை 15 நிமிடமாக குறைக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, இன்டர்வேல் நேரம் என்பது தியேட்டர் உரிமையாளர்கள் விளம்பரத்தை முடிவு செய்வது எனவும், ஏற்கனவே ட்ரைலர் வெளியிட்டபோது தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டது, தியேட்டரில் ரசிகர்கள் காட்சியின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, ரசிகர்கள் இறந்துள்ளனர்,சட்டம் ஒழுங்கு பிரச்சினை முக்கியம் என தெரிவித்தார்.

20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை , என தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும், விதிவிலக்கு அளிப்பது குறித்து அரசிடம் முறையிடுங்கள் அரசு பரீசிலிக்கட்டும் என்று தெரிவித்தார்..நேரத்தை கூட்டவோ குறைக்கவோ உத்தரவிட முடியாது ஆனால் பரீசிலிக்க உத்தரவிடுகிறேன் என குறிப்பிட்டார்..
சிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க முடியாது, 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது , 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்க வேண்டும், அதனை அரசு பரிசீலிக்க வேண்டும், அனுமதி அளித்திருக்க கூடிய நேரத்தில் எப்படி 5 காட்சிகள் திரையிட முடியும் என அரசுடன் ஆலோசனை நடத்துங்கள்

What is the real problem behind the Vijay Movie Leo release? All you need to know

தியேட்டர்கள் எதிர்ப்பு: ஆனால் ஏற்கனவே 9 மணிக்கு படத்திற்கு டிக்கெட் புக் ஆகிவிட்டது. அதனால் 7 மணிக்கு ஷோ போட்டால் 10 மணிக்குத்தான் முடியும். அதனால் 9 மணி ஷோ டிக்கெட் புக் செய்தவர்களுக்கு சிக்கல் ஏற்படும். எனவே இதை ஏற்க முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர். இதையடுத்து 9 மணி ஷோ தொடரும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஒப்பந்தம் காரணமாக புக்கிங் பிரச்சனை: பட தயாரிப்பு நிறுவனம் தியேட்டர்களிடம் 80 சதவீதம்வரை பங்கு தொகை கேட்கிறது. இதனால் பல தியேட்டர்கள் இதை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல் ஓடிடி விண்டோ 8 வாரங்கள் என்ற ஒப்பந்தங்களை மல்டிபிளக்ஸ் செய்துள்ளது. அதாவது படம் வெளியாகி 8 வாரங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கூடாது. ஆனால் ஒரு மாதத்திற்கு இந்த ஒப்பந்தத்தை லியோ பட தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் செய்துள்ளதால்.. வடஇந்திய மல்டிபிளக்ஸ் இதை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ரோகினி மறுப்பு: இதே காரணத்திற்காக திருச்சி சாந்தி சினிமாஸ் லியோ படத்தை திரையிடப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. அதேபோல் சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி தியேட்டரும் லியோ படத்தை திரையிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் உடைத்தார்: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு லியோ படத்திற்கு வாழ்த்து சொல்வது போலவே.. கூடவே சேர்த்து படம் எல்சியு என்ற உண்மையையும் போட்டு உடைத்தார் உதயநிதி ஸ்டாலின். படத்தின் பெரிய சர்ப்ரைஸை அவர் உடைத்தது பெரிய சர்ச்சையானது.

மற்ற மாநிலங்களில் திரையிடல்: மற்ற மாநிலங்களில் இந்த படம் காலை 3- 5 மணிக்கு எல்லாமே ரிலீஸ் ஆகிறது. அப்படி இருக்க தமிழ்நாட்டில் தமிழ் படம் 9 மணிக்கு ரிலீஸ் ஆவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+