நான் இருக்கிறேனு சொன்ன சந்தோஷ்பாபுவும் கைவிட்டது ஏன்.. மநீமவில் மே 7இல் என்னதான் நடந்தது?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணைத் தலைவர் மகேந்திரன், பொன்ராஜ் உள்ளிட்டோர் விலகிய போது கமல்ஹாசனுடன் நான் நிற்கிறேன் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் விலகுவதாக அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 2.45 சதவீதம் வாக்குகளையே பெற்றது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட குறைவானதாகும்.
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

நம்பிக்கை
இந்த நிலையில் அன்றைய தினம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ் உள்ளிட்டோர் விலகினர். அதில் மகேந்திரன், தோல்வியிலிருந்து கமல் பாடம் கற்று கொள்ளவில்லை என்றும் இனி அவர் மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றும் தெரிவித்துவிட்டு விலகினார்.

சந்தோஷ்பாபு ட்வீட்
இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இது போல் ஒவ்வொருவராக ராஜினாமா செய்துவந்தனர். இந்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு ஐஏஎஸ், மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தை தரும் அருகதை கமலுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன் என சந்தோஷ் பாபு தெரிவித்திருந்தார்.

பத்மப்ரியா
ஆனால் மேற்கண்ட பதிவு போட்டு 6 நாட்களில் தனது நிலைப்பாட்டை சந்தோஷ்பாபு மாற்றிக் கொண்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி அடிப்படை உறுப்பினர், பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் என தெரியவில்லை. அது போல் தமிழச்சி பத்மப்ரியாவும் விலகியுள்ளார்.

மநீம கட்சி
இதையெல்லாம் பார்க்கும்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டடபை தேர்தலுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் நுழைந்து கமலுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தருவதாக விலகியவர்கள் கூறுகிறார்கள்.

தோற்று போனது
அந்த நிறுவனம் கூறுவதைதான் கமலும் கேட்கிறார், கள நிலவரத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் சட்டசபைத் தோல்விக்கு யாருக்கு எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நிர்வாகிகள் மீதும் திணித்த கமல்ஹாசன், தேர்தல் தோல்விக்கு தான் பொறுப்பு கிடையாது என்ற தோற்றத்தில் பேசியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

சமாளிப்பாரா
பதவியில் உள்ள நிர்வாகிகளை ராஜினாமா செய்யுமாறு கமல் வற்புறுத்தியதாக கூறுகிறார்கள். செய்யாவிட்டால்... என கமல் மிரட்டும்தொனியில் பேசியதாக தெரிவிக்கிறார்கள். தோல்விக்கு தன் மீதான பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு அதை நிர்வாகிகள் மீது போடுகிறாரே, ஒரு வேளை வென்றிருந்தால் அந்த வெற்றிக்கு நிர்வாகிகள்தான் காரணம் என சொல்லியிருப்பாரா? என கேள்வி எழுப்புகிறார்கள். இப்படியே ஒவ்வொரு நிர்வாகிகளாக விலகி வந்தால் கமல்ஹாசன் நிலைமையை எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications