அவசரப்படாதீர்கள் - விஜய்.. இப்போதே நடக்கணும் - எஸ்.ஏ.சி.. இதுதான் பிரச்சினைக்கு காரணமா?
சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் தன்னிச்சையான செயல்பாடுகளால் விஜய்க்கு அதிருப்தி நிலவியுள்ளதால்தான் இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.
நடிகர் விஜய் சினிமா படங்களில் பேசுவதை காட்டிலும் நிஜ வாழ்க்கையில் குறைந்த அளவிலேயே பேசும் சுபாவம் கொண்டவர். அண்மைக்காலமாகதான் இசை வெளியீட்டு விழாக்களில் பேசி வருகிறார்.
யார் சீண்டினாலும் கோபத்தை கொப்பளிக்காமல் செயல்பாடுகள் மூலம் பதில் அளித்து வருபவர். விஜய் சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணங்களில் அவருடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, இதெல்லாம் இருந்தாலும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

விஜய் மக்கள் இயக்கம்
அப்படிப்பட்ட எஸ்ஏ சந்திரசேகர் தனது மகன் பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை தொடங்கினார். சினிமாவில் ஒரு நல்ல இடத்தை விஜய் அடைந்ததை பார்த்த எஸ்ஏசிக்கு அவர் அரசியலிலும் சோபிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து சினிமா படங்களிலும் இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசிய அரசியல் அனைவரையும் கவர்ந்தது.

விஜய் அரசியல்
அவரது ரசிகர்களும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். விஜய்க்கும் இந்த ஆசை இருக்கும் போதிலும் அவருடைய இலக்கு என்பது வரும் 2026 சட்டசபை தேர்தலாகவே உள்ளது. ஆனால் எஸ்ஏசியோ தனது மகன் கடந்த சட்டசபை தேர்தலிலேயே அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினார்.

விஜய்க்கு அதிருப்தி
விஜய் தனது கருத்தை சொல்லிய பிறகு எஸ்ஏசி , மன்மோகன் சிங், பிரதமர் மோடி ஆகியோரை பார்த்தது உள்ளிட்ட தன்னிச்சையான முடிவுகளாக விஜய்க்கு அதிருப்தி நிலவி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே சில காலங்களாக பேச்சுவார்த்தை என்பதே இல்லாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எஸ்ஏசி
இதை எஸ்ஏசியும் தனது பேட்டியில் தற்போது மறைமுகமாக விளக்கி வருகிறார். அதாவது விஜய்க்கும் அவருடைய அம்மா ஷோபாவுக்கும் இடையே சுமுகமான உறவு நீடித்து வருவதாகவே கூறியுள்ளார், எனவே அப்பா- மகனுக்கு இடையேயான உறவில் சுமுக உறவு இல்லை என தெரிகிறது. இந்த நிலையில்தான் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் எஸ்ஏசி பதிவு செய்தார்.

பொருளாளர் ஷோபா
மேலும் அந்த கட்சியின் தலைவராக சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்பட பல நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் அப்பாவின் அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் அறிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் வெளிப்படையாக தெரிந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனது புகைப்படத்தை ரசிகர்கள் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ, கொடி புகைப்படங்கள் பயன்படுத்தவோ தந்தை எஸ் ஏ சந்திரசேகர், மற்றும் தாய் ஷோபா ஆகியோருக்கு தடைவிதிக்கக் கோரி விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்கள் இயக்கம் கலைப்பு
இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது. மேலும் தனக்கும் தனது மகன் விஜய்க்கும் இடையே பிரச்சினை இருப்பது உண்மைதான் என எஸ்ஏசி டிவி பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வரும் எண்ணத்தில் விஜய் இருக்கும் போதிலும் அதை தற்போதே செய்ய வேண்டும் என எஸ்ஏசி அவசரப்படுத்தியதுதான் இருவருக்கும் இடையே விரிசலை விஸ்வரூபம் எடுக்க வைத்தது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications